பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 755

குலங்களோடு  அடங்கக்  கொன்று, கொடுந் தொழில்  
                             குறித்து, நம்மேல்
விலங்குவார் என்னின், தேவர் விண்ணையும்
                           மண்ணில் வீழ்த்தும்.

 

இலங்கையை  இடந்து வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப் -
இலங்கை   நகரத்தையே பெயர்த்து விட்டு கொடிய கண்களை  உடைய
அரக்கர்   என்பவர்களை; பொலங்குழை  மகளிரோடும் பால்  நுகர்
புதல்வரோடும்  
 -    பொன்னாலியன்ற    குழையினை   அணிந்த
மனைவியரோடும் பாலுண்கின்ற   புதல்வர்களோடும்;   குலங்களோடு
அடங்கக்கொன்று,  கொடுந்தொழில்   குறித்து  
-    இனத்தோடு
அழியுமாறு கொன்று; அக்கொலைத்  தொழிலைக்குறித்து;  நம்மேல்
விலங்குவார் தேவர் என்னின்
  -   நம்மேல்   வெகுண்டு   வந்து
தேவர்கள் தடுப்பாராயின்;  விண்ணையும்  மண்ணில்  வீழ்த்தும்  -
அவர்களது விண்ணுலகத்தையும் இம்மண்ணுலகத்தில் வீழ்த்துவோம்.
 

                                                 (71)
 

8911.

‘அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின்,
                                         ஐய!
புறம் கிடந்து  உழைப்பது  என்னே?  பொழுது இறை
                               புவனம் மூன்றும்
கறங்கு எனத் திரிந்து, தேவர் குலங்களைக் கட்டும்’
                                      என்னா,
மறம் கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல்
                                 வாவலுற்றான்.
 

அறம்  கெடச்  செய்தும்  என்றே  அமைந்தனம்  ஆகின் -
‘அறங்கெடுமாறு   (செயல்)    செய்வோம்     என்றே     துணிந்து
விட்டோமாயின்; ஐய! புறம்  கிடந்து உழைப்பது என்னே - ஐயனே!
புறத்தே   கிடந்து  வருந்துவது  எதற்காக?  இறைபொழுது  புவனம்
மூன்றும் கறங்கு எனத் திரிந்து
- சிறிது பொழுதினுக்குள் உலகங்கள்
மூன்றிலும் காற்றாடி  போலத்திரிந்து; தேவர்  குலங்களைக்  கட்டும்
என்னா  
 -   தேவர்   குலங்களையும்   களைந்தெறிவோம்’  என்று
கூறியவாறு;   மறம்  கிளர்  வயிரத்தோளான்   இலங்கை   மேல்
வாவலுற்றான்
-  வீரம்  விளங்குகின்ற  வயிரம் போன்ற  தோள்களை
உடையவனான சுக்கிரீவன் இலங்கை மேல் பாயத் தொடங்கினான்.
 

                                                 (72)