இராமன் மனம் அழிதல் | 8912. | மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி, ‘எற்றுதும், அரக்கர்தம்மை இல்லொடும் எடுத்து’என்று, ஏகல் உற்றனர்; உறுதலோடும், ‘உணர்த்துவது உளது’ என்று உன்னா, சொற்றனன் அனுமன், வஞ்சன் அயோத்திமேல் போன சூழ்ச்சி. | மன்னனின் முன்னம் - சுக்கிரீவ மகாராஜாவுக்கு முன்னால்; மற்றைய வீரர் எல்லாம் - ஏனைய வானர வீரர்கள் அனைவரும்; தாவி - (இலங்கைமேல்) புறப்பட்டு; ‘அரக்கர் தம்மை இல்லொடும் எடுத்து எற்றுதும்’ என்று - ‘அரக்கர்களை அவர்கள் வாழும் வீட்டோடு தூக்கி மோதிவிடுவோம்’ என்று சொல்லி; ஏகல் உற்றனர்- செல்லத் தொடங்கினார்கள்; உறுதலோடும் - அப்படிச் செல்லத் தொடங்கியவுடனே; அனுமன் -; ‘உணர்த்துவது உளது’ என்று உன்னா -‘இவர்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது’ என்று (மனத்தில்) கருதி; வஞ்சன் - வஞ்சனையுடையவனான இந்திரசித்து; அயோத்தி மேல் போன சூழ்ச்சி - அயோத்தியை நோக்கிப் போர் செய்யச் (செல்வதாகச்) சென்ற தீய ஆலோசனையை; சொற்றனன் - எடுத்துச் சொன்னான். | இலங்கையை அழிப்பதினும் மிக முக்கியம் அயோத்தியில் உள்ளாரைப் பாதுகாப்பது ஆதலின் இதுகாறும் சொல்லாதுவிட்ட அந்த இந்திரசித்துவின் செயலை விரைந்து சொன்னான். | (73) | 8913. | தாயரும் தம்பிமாரும் தவம்புரி நகரம் சாரப் போயினன் என்ற மாற்றம் செவித்துளை புகுதலோடும், மேயின அடியின் நின்ற வேதனைகளைய, வெந்த தீயிடைத் தனிந்தது என்ன, சீதைபால் துயரம் தீர்ந்தான். | தாயரும் தம்பி மாரும் தவம்புரிநகரம் சார - தாய்மாரும், தம்பிமாரும், தவம் புரிந்து கொண்டிருக்கும் அயோத்தி நகருக்கு; போயினன் என்ற மாற்றம் செவித் துளை புகுதலோடும் -அரக்கன் போயினன் என்ற சொல் (இராமனது) செவித்துளையில் புகுந்தவுடன்; மேயின அடியின் நின்ற வேதனை, களைய வெந்த - |
|
|
|