பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 757

முன்னம்    அடிபட்டதனால்   உண்டானதுன்பம்  மிகுதியாக வெந்த;
தீயிடைத் தணிந்தது   என்ன   சீதைபால் துயரம்  தீர்ந்தான் -
தீபட்டதனால்    தணிந்தது   போல   சீதை  காரணமாக    ஏற்பட்ட
துயரத்தினின்றும் தீர்ந்தான்.
 

                                                 (74)
 

8914.

அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று, அனந்தர்
                                      நீங்கி
எழுந்தனன் என்ன, துன்பக் கடலின்நின்று ஏறி,
                                     ஆறாக்
கொழுந்து உறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக்
                                       கூட,
உழுந்து உருள் பொழுதும் தாழா விரைவினான்,
                            மறுக்கம் உற்றான்.
 

அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி நின்று, அனந்தர் நீங்கி -
ஆழமான பாலின் வெள்ளத்தை உடைய  கடலிலிருந்து  உறக்கம் நீங்கி;
எழுந்தனன் என்ன துன்பக் கடலின்  நின்று  ஏறி  -  எழுந்தவன்
போலத் துன்பமாகிய  கடலினின்றும்  ஏறி;  ஆறாக்  கொழுந்து உற
கோபத்  தீயும் நடுக்கமும்   மனத்தைக்   கூட
 -  ஆறாததாய்க்
கொழுந்துவிட்டு எரிகின்ற  கோபத்தீயும்  நடுக்கமும்  உள்ளத்தைச் சேர;
உழுந்து உருள் பொழுதும் தாழா விரைவினான் மறுக்கம் உற்றான்
- உழுந்து  உருள்   பொழுதுங்   கூடத்  தாமதித்தலில்லாத  விரைந்த
முயற்சியை உடையவனான இராமன் கலக்கம் அடைந்தான்.
 

                                                 (75)
 

8915.

‘தீரும் இச் சீதையோடும் என்கிலது அன்று, என்
                                      தீமை;
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது; வேறும்
                                    இன்னும்
யாரொடும் தொடரும் என்பது அறிகிலேன்; இதனை,
                                       ஐய!
பேரிட அவதி உண்டோ? எம்பியர்
                           பிழைக்கின்றாரோ?
 

என் தீமை தீரும் இச்சீதையோடும் என்கிலது அன்று - எனது
தீவினை,      இச்சீதையோடும்      தீர்ந்து      விடும்      என்று
சொல்லக்கூடியதாகவும்    இல்லை;     வேரொடு   முடிப்பது  ஆக
விளைந்தது
- எம்