8916. | ‘நினைவதன் முன்னம் செல்லும் மானத்தில் நெடிது போனான், வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான்; வினையேன் வந்த மனை பொடி பட்டது, அங்கு; மாண்டது, தாரம் ஈண்டும்; எனையன தொடரும் என்பது உணர்கிலேன்! இறப்பும் காணேன்! |
8917. | ‘தாதைக்கும், சடாயுவான தந்தைக்கும், தமியள் ஆய சீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது, ஒருவன் தீமை; பேதைப் பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழைப்பு இலாத காதல் தம்பியர்க்கும், ஊர்க்கும், நாட்டிற்கும், காட்டிற்று அன்றே. |