ஒருவன் தீமை தாதைக்கும் சடாயுவான தந்தைக்கும் - ஒருவனாகிய என்னுடைய தீமை, என்னுடைய தந்தைக்கும், (என்னைமகனாக ஏற்ற) சடாயுவான தந்தைக்கும்; தமியள் ஆய சீதைக்கும் கூற்றம் காட்டித் தீர்ந்திலது -தனிமைப்பட்ட சீதைக்கும், மரணத்தை விளைவித்தும் நீங்காமல்; பேதைப் பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் - பேதமை வாய்ந்த பெண் பிறவியாய்ப் பிறந்து என்னைப் பெற்றதைத் தவிர வேறு குறையற்ற தாயர்க்கும்; பிழைப்பு இலாத காதல் தம்பியர்க்கும் - எந்தத் தவறும் இல்லாத அன்புடைய தம்பிமார்க்கும்; ஊர்க்கும், நாட்டிற்கும் காட்டிற்று அன்றே - அயோத்தி என்னும் எமது ஊரக்கும், எமது கோசல நாட்டிற்கும் இறுதியைக் காட்டி விட்டது. |
8918. | ‘உற்றது ஒன்று உணரகில்லார்; உணர்ந்து வந்து உருத்தாரேனும், வெற்றி வெம் பாசம் வீசி விசித்து, அவன் கொன்று வீழ்த்தால், மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன்; மருந்து நல்கக் கொற்ற மாருதி அங்கு இல்லை; யார் உயிர் கொடுக்கற்பாலார்? |