பக்கம் எண் :

76யுத்த காண்டம் 

வில்லைக்     கையில் கொண்டு; வாள் பொன் தாள் கவசம் புகுதா -
ஒளி   பொருந்திய  பொன்னால்   செய்யப்பட்ட   கவசத்தினுட்புகுந்து,
முகிலின்  நின்றான் -  கருமுகில்  போல்  நின்றான்; இமையோர்கள்
நெளிந்தனரால்
 -  (அத்தோற்றத்தைப்  பார்த்து)  தேவர்கள்  நடுங்கி
உடல் தளர்ந்தனர்.

எழா   - எழுந்து, பொன் தாள் கவசம் புகுதா - பொன்னால் ஆகிய
கவசத்தை  அணிந்து,  நெளிதல்  - நடுங்கி உடல்  தளர்தல்,  முகிலின்
நின்றான்   -   அதிகாயன்   கரு    நிறத்தோடு  வில்லைக்   கையில்
கொண்டிருத்தலின்  இவ்வுவமை  என்க.  எழா  -  புகுதா  -  செய்யா
என்னும்    வாய்பாட்டு     வினையெச்சங்கள்.     வயிரச்சிலை    -
பண்புத்தொகை. கொடு - இடைக்குறை.

                                                   (19)

7746.பல் வேறு படைக்கலம், வெம் பகலோன்
எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால்,
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா -
வில் வேறு தெரிப்புறும் மேனியினான்.

மாவில்  வேறு  தெரிப்புறும்   மேனியினான்  -  யானையினும்
(வேறாக) பெரிதாகத்  தோன்றும்  உடலை  உடையவனான  அதிகாயன்;
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற  - கொடுஞ் சொற்களால் அதட்டுகிற
வீரர் (தன்னைச்) சூழ்ந்துவர; பல்வேறு  படைக்கலம்  - பலவகையான
வேறுபட்ட  படைக்கலங்கள்;  வெம்பகலோன் எல்வேறு  தெரிப்ப -
கடுமையான    கதிரவன்    ஒலியைக்   காட்டிலும்    வேறாக   ஒளி
வீசுபவைகளைக்; கொடு ஏகினனால் - (கையில்) கொண்டு சென்றான்.

மா -  விலங்கு இங்கு யானை, தெழித்தல் - அதட்டுதல், எல் - ஒளி
ஆல் - அசை. தெழிக்குநர் - வினையாலணையும் பெயர்.

                                                  (20)

                                 அதிகாயனுடன் சென்ற படைகள்

7747.இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி
முழை அஞ்ச முழங்கின; மும் முறை நீர்
குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள்
மழை அஞ்ச முழங்கின, மா அரசே.

இழை  அஞ்சன  மால்  களிறு  -  முகபடாம்  பூண்ட  மைக்கரு
நிறமுடை மதம் மிக்க யானைகள்; முழை அஞ்ச முழங்கின எண்