அயோத்திக்கு விரைய வழி உண்டோ? என இராமன் வினாவுதல் | 8919. | ‘மாக ஆகாயம் செல்ல, வல்லையின், வயிரத் தோளாய்! ஏகுவான் உபாயம் உண்டேல், இயம்புதி; நின்ற எல்லாம் சாக; மற்று, இலங்கைப் போரும் தவிர்க; அச் சழக்கன் கண்கள் காகம் உண்டதற்பின், மீண்டும் முடிப்பென் என் கருத்தை’ என்றான். | வயிரத்தோளாய் - வயிரம் போன்ற தோளை உடைய வீடணனே! மாக ஆகாயம் வல்லையின் செல்ல - மாகம் எனப்படும் ஆகாயவழியே விரைவாகச் செல்லவும்; ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி - அயோத்தியைச் சேரவும் உபாயம் இருக்குமாயின் இயம்புக;நின்ற எல்லாம் சாக, மற்று இலங்கைப் போரும் தவிர்க - எஞ்சி நின்றனவெல்லாம் அழியட்டும் இலங்கைப்போரும் நிற்கட்டும்; அச்சழக்கன் கண்கள் காகம் உண்டதற்பின் - அக்கொடியவனான இந்திர சித்தின் கண்களைக் காகம் உண்டபின்; மீண்டும் என்கருத்தை முடிப்பென் என்றான் - மீண்டும் வந்து என் கருத்தை முடிப்பேன் என்று இராமன் கூறினான். | (80) | பரதனரைப் பற்றிய இலக்குவன் கணிப்பு | 8920. | அவ் இடத்து, இளவல் ‘ஐய! பரதனை அமரின் ஆர்க்க, எவ் விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று; தெவ் இடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து அறாவோ? வெவ் இடர்க் கடலின் வைகல்; கேள்’ என, விளம்பலுற்றான்: | அவ்இடத்து, இளவல், ஐய! பரதனை அமரின் ஆர்க்க - (இராமன் இவ்வாறு கூறிய) அப்போது, இலக்குவன் (இராமனை நோக்கி) ஐயனை! பரதனைப் போரில் கட்டுமாறு; எவ்விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று - நாகபாசம் முதலான படையினை ஏவுவதற்கு உரியவனாய்ப் போன இந்திரசித்தே |
|
|
|