பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 761

அல்ல; மும்மை   உலகமும்   தெவ்   இடத்து  அமையின் தீந்து
அறாவோ
 - மூன்று உலகமும் சேர்ந்து  பகைப்புலத்து   நிற்குமாயினும்
அழிந்து ஒழியாவோ;வெவ்  இடர்க்  கடலின்  வைகல்; கேள் என,
விளம்பலுற்றான்
 - கொடிய துன்பக்கடலில் நீதங்கவேண்டா; எனக்கூறத்
தொடங்கினான்.
 

                                                 (81)
 

8921.

‘தீக் கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட,
வீக் கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக்
கூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன்
                                          ஆதல்,
போய்க் கண்டு கோடி அன்றே?’ என்றனன்
                              புழுங்குகின்றான்.
 

தீக்கொண்ட   வஞ்சன்  வீச  திசை  முகன்  பாசம் தீண்ட -
தீமையை  இயல்பாகக்  கொண்ட  வஞ்சனாகிய  இந்திரசித்து வீசியதால்
பிரமன் அளித்த  நாகபாசம்  வந்து  தீண்டிய  உடனே;  வீக்கொண்டு
வீழ, யானோ பரதனும் 
-  இறந்து   வீழ  யானோ  பரதனும்? (யான்
அல்லன் அப்பரதன்); அன்னான் குத்துண்டு வெய்ய கூற்றைக் கூய்க்
கொண்டு
-  அவ்   இந்திரசித்து   (பரதனால்)   குத்துப்பட்டு கொடிய
யமனைக் கூவி அழைத்தவாறு;  குலத்தொடு  நிலத்தன் ஆதல் - தன்
இனத்தவரோடு நிலத்தில் வீழ்வதனை; போய்க்கண்டு கோடி அன்றே?
என்றனன், புழுங்குகின்றான்
- நீயே போய் நேரே கண்டு கொள்வாய்
அல்லவோ? என்று கூறினான் மனம்புழுங்குகின்றவனாகிய இலக்குவன்.
 

இராமனைத்    தேற்றக்கூறினான்  என்பதிலும்  பரதன்   தன்னினும்
பேராற்றல்  உடையவன்  என்பதை  உணர்ந்தே   கூறினான்  என்பதே
பொருந்தும்.   “வள்ளலையே   அனையான்   அல்லவோ   (கம்ப.657)
பரதன்.
 

                                                 (82)
 

இராம - இலக்குவர்  அயோத்தி செல்லத் தன் தோள்மேல் ஏறுமாறு
                                         அனுமன் வேண்டுதல்

 

8922.

அக் கணத்து அனுமன் நின்றான், ‘ஐய! என் தோளின்
                                        ஆதல்,
கைத் துணைத் தலத்தே ஆதல், ஏறுதிர்; காற்றும் தாழ,