இழுக்கம் உற்றான் - அங்ஙனமின்றி இருந்திருப்பானேயானால் தீயனாகிய அவன் உயிர் வாழ்ந்திருப்பானோ? தவறு செய்தான்? | (84) | 8924. | ‘மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக, நினைப்பின் முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து நிற்பென்; இனி, சில தாழ்ப்பது என்னே? ஏறுதிர், இரண்டு தோளும், புனத் துழாய் மாலை மார்பீர்! புட்பகம் போதல் முன்னம்.’ | மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக - மனத்தின் முன் விரைவாகச் செல்லத்தக்க புட்பக விமானம் போன வழியாகவே; நினைப்பின முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து நிற்பென் - அவ்விமானம் பிற்படும்படி நம் நினைப்பினும் முன்னதாக அயோத்தியை அடைந்து அவ்விமானம் வரும் வழியை எதிர்பார்த்துக்கொண்டு நிற்பேன்; புனத்துழாய் மாலை மார்பீர் இனிச் சிலதாழ்ப்பது என்னே? - துளபமாலையை அணிந்தமார்பினை உடையவர்களே! இனிச்சில கணங்கள் தாமும் தாழ்ப்பது எதற்கு? புட்பகம் போதல் முன்னம் இரண்டு தோளும் ஏறுதிர் - புட்பகவிமானம் போவதற்குமுன்பே அயோத்தியை அடையுமாறு என் இரண்டு தோள்களிலும் ஏறுங்கள்; (என அனுமன் கூறினான்) | (85) | வீடணன், ‘இது மாயம்’ எனல் | 8925. | ‘ஏறுதும்’ என்னா, வீரர் எழுதலும், இறைஞ்சி, ‘ஈண்டுக் கூறுவது உளது: துன்பம் கோளுறக் குலுங்கி, உள்ளம் தேறுவது அரிது; செய்கை மயங்கினென்; திகைத்து நின்றேன்; ஆறினென்; அதனை, ஐய! மாயம் என்று அயிர்க்கின்றேனால். | ‘ஏறுதும்’ என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி - (அனுமன் தோள்மேல்) ஏறுவோம் என்று இராமலக்குவர் எழுகையில் |
|
|
|