பக்கம் எண் :

764யுத்த காண்டம் 

(வீடணன்    இராமணை) வணங்கி; ஈண்டுக் கூறுவது உளது  துன்பம்
கோளுற  உள்ளம்  குலுங்கி
 -  இப்போது  யான் சொல்ல வேண்டிய
செய்தி உளது, துன்பம் என்னை முழுமையாகக்  கொண்டதால்  உள்ளம்
நடுங்கி;   தேறுவது  அரிது;  செய்கை   மயங்கினென்   திகைத்து
நின்றேன்
  - தெளிவு   பெறுவது   அரிதாய்விட்டமையால்,    செயல்
மயங்கியவனாய்த் திகைத்து  நின்றேன்; ஆறினென்;  அதனை  ஐயா!
மாயம்  என்று  அயிர்க்கின்றேனால்
  -   இப்போது    அத்துன்பம்
ஆறினென்;  (தெளிவுற்றேன்)    ஐயனே!    (இந்திரசித்து)   சீதையைக்
கொன்ற செயல் மாயம் என்று ஐயறுகின்றேன்.
 

                                                 (86)
 

8926.
 

‘பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது,
முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே?
அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம், சிறிது போழ்தின்.
 

பத்தினி   தன்னைத்  தீண்டிப்  பாதகன்     படுத்தபோது -
பத்தினியாகிய       சீதையைப்        பாதகனாகிய      இந்திரசித்து
தீண்டிக்கொன்றிருப்பானாயின்   அச்     செயல்    நடந்த    போதே;
முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே?
-   மூன்று
வகையான  உலகங்களும்  வெந்து  சாம்பலாய்ப்  போயிருக்கு மன்றோ?
(அங்ஙனம் நடவாமையின் அது மாயச்செயலே); அத்திறம் ஆனதேனும்
அயோத்தி  மேல்  போன  வார்த்தை
-  அந்நிகழ்ச்சி உண்மையாக
நடந்திருந்ததாயினும்    இந்திரசித்து   அயோத்தி   மேல்   போனான்
என்றவார்த்தை       சித்திரம்     இதனையெல்லாம்      சிறிது
போழ்தின்தெரியலாம்
   -   அதிசயமானது  இதையெல்லாம்  இன்னும்
சிறிது நேரத்தில்  தெரிந்து கொள்ளலாம்.
 

                                                 (87)
 

        வீடணன் வண்டு உருக்கொண்டு சென்று சீதையைக் காணுதல்
 

8927.

‘இமை இடையாக யான் சென்று, ஏந்திழை இருக்கை எய்தி,
அமைவுற நோக்கி, உற்றது அறிந்து வந்து அறைந்த
                                  பின்னைச்