பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 765

சமைவது செய்வது’ என்று வீடணன் விளம்ப, ‘தக்கது;
அமைவது’ என்று இராமன் சொன்னான்; அந்தரத்து
                             அவனும் சென்றான்.

 

இமை இடையாக யான் சென்று - இமைப்பொழுதுக்குள்ளாக யான்
போய்;   ஏந்திழை  இருக்கை  எய்தி  -  சீதையின்  இருப்பிடத்தை
அடைந்து;  அமைவுற  நோக்கி  -  பொருத்த  முறப்பார்த்து; உற்றது
அறிந்து வந்து  அறைந்து  பின்னர்ச்
 - நிகழ்ந்ததை அறிந்து வந்து
(யான்) சொன்ன பின்பு; ‘சமைவது செய்வது’ என்று வீடணன் விளம்ப
- ‘பொருந்தியது செய்யத் தக்கது’  என்று  வீடணன் சொல்ல; இராமன்,
‘தக்கது  அமைவது’  என்று  சொன்னான்
-  இராமன் இது செய்யத்
தக்கது!  பொருத்தமானது! என்று உடன்பட்டுச் சொன்னான்;   அவனும்
அந்தரத்து   சென்றான்
  -   வீடணனும்   விண்வழியே   (அசோக
வனத்திற்குப்) போனான்.
 

                                                 (88)
 

8928.

வண்டினது  உருவம் கொண்டான், மானவன் மனத்தின்
                                      போனான்;
தண்டலை இருக்கைதன்னைப் பொருக்கெனச் சார்ந்து,
                                         தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால்-கருத்தில் ‘ஆவி
உண்டு, இலை’ என்ன நின்ற, ஓவியம் ஒக்கின்றாளை.
 

வண்டினது   உருவம் கொண்டான் -  வண்டினது   உருவத்தைக்
கொண்டவனாய்;   மானவன்   மனத்தின்  போனான்  -  இராமனது
மனத்தைப்  போல் விரைந்து சென்று; தண்டலை இருக்கை  தன்னைப்
பொருக்கெனச்    சார்ந்து  
  -   அசோகவனத்திலுள்ள   சீதையின்
இருப்பிடத்தை  விரைந்து  அடைந்து;  ‘ஆவி  உண்டு, இலை’ என்ன
நின்ற  
 -   உயிர்  உண்டு,  இல்லை  என  ஐயுற்றுச்   சொல்லுமாறு
இருக்கின்ற;   ஓவியம்  ஓக்கின்றாளை  -  ஓவியம்  போன்றவளாகிய
சீதையை;  தானே  கண்களால்  கருத்தில் கண்டனன்  - (வீடணன்)
தானே தன் கண்களினால் கருத்தோடு கண்டான்.