என்ப, மன் ஓ - ஓசை. பிறர் அறியாமலிருக்க வீடணன் வண்டின் உருவத்தை எடுத்தான். மானவன் - பெருமை உடையவன் - இராமன்; தண்டலை - குளிர்ந்த இடம். பொருக்கென - இடைச்சொல், விரைவு உணர்த்த வந்தது. | (89) | வீடணன், இந்திரசித்தன் சூழ்ச்சியை உணர்தல் | 8929. | ‘தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு’ என்று உணர்ந்த சிந்தை பேர்ப்பன செஞ் சொலாள், அத் திரிசடை பேசப் பேர்ந்தாள், கார்ப் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக, ஆர் உயிர் ஆற்றினாளை, | யான் துன்பம் தீர்ப்பது என் உயிரொடு என்று - ‘யான் துன்பம் தீர்வது என் உயிரோடுதான்’ என்று; உணர்ந்த சிந்தை பேர்ப்பன செஞ்சொலாள் - எண்ணி (இறக்கத்துணிந்த) மனத்தை மாற்றும் ஆற்றலுடைய செம்மையான சொற்களை உடையவளான; அத்திரிசடை பேசப் பேர்ந்தாள் - அந்தத் திரிசடை பேசியதால் துன்பம் நீங்கப் பெற்றவளாய்; கார்ப்பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன - கரிய பெரிய மேகம் வந்து ஊழி இறுதியில் கலந்து ஆரவாரித்தாற்போன்ற; ஆர்ப்பொலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை - (வானரங்களின்) ஆரவார ஒலியே தனக்கு அமிழ்தம் போன்றதாகத் தன் அரிய உயிரைச் சுமந்திருந்த சீதையை. ‘கண்டனன்’ என்று முன்பாட்டில் முடிந்தது. | (90) | 8930. | வஞ்சனை என்பது உன்னி, வான் உயர் உவகை வைகும் நெஞ்சினன் ஆகி, உள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான், ‘வெஞ் சிலை மைந்தன் போனான், நிகும்பலை வேள்வியான்’ என்று, எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து, எழுந்து, ஏகக் கண்டான். | வஞ்சனை என்பது உன்னி - (சீதையைக் கொன்றசெயல்) மாயம் என்பதை நினைத்து; வான் உயர் உவகை வைகும் |
|
|
|