பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 77

இல்   அரி - குகையில் வாழ்ந்து (கேட்போர்) அஞ்சுமாறு கர்ச்சனை
செய்யும் எண்ணிலா அளவுடைச் சிங்கங்கள்,நாண் ஒலி, மும்முறை
நீர்  குழை  அச்ச  முழங்கின
- (ஆகியவற்றோடு) வில்லின் நாணைத்
தெரிக்கும்  ஓசை   கடல்  நீரும்   குழைந்து  அஞ்சுமாறு   முழங்கின;
மாமுரசு கோள் மழை அஞ்ச முழங்கின - பெரிய முரசங்கள் (நீரைக்)
கொள்ளுதல் உடைய மேகங்களும் அஞ்சும்படி முழங்கின.

இழை     - அணிகலன்  இங்கு  முகபடாம். அஞ்சனம் - கண்மை.
முழை  -  குகை.  குழை  அஞ்ச  - குழைந்து  அஞ்சும்படி.  கோள் -
முதனிலை திரிந்த தொழிற்பெயர். மாமுரசு உரிச்சொல் தொடர்.

                                                  (21)

7748.ஆர்த்தார், நெடு வானம் நடுங்க; அடிப்
பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என;
தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்;
வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர்.

நெடுவானம்     நடுங்க ஆர்த்தார் - (அதிகாயன் உடன் சென்ற
வீரர்கள்  நெடிய  வானமும் நடுங்குமாறு பேரொலி செய்தனர்;  நிலமா
மகள் பேர்வள் என  அடிப்  பேர்த்தார்
- பெரிய நிலமாகிய பெண்
இடம்  பெயர்வள்  என்னுமாறு  காலை  மாறி மாறி வைத்தனர்;  நெடு
வேலைகள் தூளியினால்  தூர்த்தார்
 -  பெரிய கடல்களை (காலடித்)
தூசியினால்  தூர்த்து  நிரப்பினர்;  அது   கண்டு - அச்செயல்களைக்
கண்டு; விசும்பு உறைவோர் வேர்த்தார் - ஆகாயத்தில் வாழ்பவரான
தேவர்கள், உடல் வியர்த்தார்.

தூளி -  தூசி.  வேர்த்தல் - அச்சத்தின் செயல் என்க. நிலமா மகள்
- உருவகம். மாமகள் - உரிச்சொல் தொடர்.

                                                  (22)

7749.அடியோடு மதக் களி யானைகளின்
படியோடு நிகர்த்தன, பின் புறம், முன்-
தடியோடு துடக்கிய தாரைய, வெண்
கொடியோடு துடக்கிய, கொண்மு எலாம்.

தடியோடு    துடக்கிய தாரைய - தடித்து (மின்னும்) மின்னலோடு
பொருந்திய ஒழுங்கை உடைய; வெண் கொடியோடு துடக்கியகொணமு
எலாம்
 - வெண்ணிறக் கொடியோடு துடக்குண்டு  செல்லும்  மேகங்கள்
எல்லாம்;  முன்  அடியோடு  மதக்களி  யானைகளின்  -  முன்னே
விரைவாக அடியிட்டு ஓடுகிற