(துணையாக) உள்ளது; (அத்துடன்) வேதமும் (துணையென) உள்ளது. |
(1) |
8935. | என்றலும், இறைஞ்சி, ‘யாகம் முற்றுமேல், யாரும் வெல்லார் வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும் சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென்’ என்றான்; ‘நன்று அது; புரிதிர்!’ என்னா, நாயகன் நவில்வதானான்: |
என்றலும் இறைஞ்சி - என்று (இராமன்) கூறிய அளவில் (வீடணன் இராமனை) வணங்கி; யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார் - (இந்திரசித்து செய்யத் தொடங்கிய) வேள்வி நிறைவுறுமானால் யாரும் அவனை வெல்ல வல்லவராகார்; வென்றியும் அரக்கர் மேற்றே - வெற்றியும் அரக்கர் பக்கத்தேயாகும்; விடை அருள் இளவலோடும் சென்று அவன் ஆவி உண்டு - ஆகவே விடை கொடுப்பாயாக இலக்குவனோடும் சென்று அவனது உயிரை உண்டு; வேள்வியும் சிதைப்பன் என்றான் - அவன் இயற்றும் வேள்வியினையும் அழிப்பேன் என்று கூறினான்; நாயகன், ‘நன்று அது புரிதிர்’ என்னா நவில்வதானான் - தலைவனாகிய இராமன் ‘நல்லது! அதனைச் செய்யுங்கள்! எனச் சொல்லி (மேலும் சிலவற்றைக்) கூறுவானாயினன். |
என்றான் என்னும் பயனிலைக்குரிய வீடணன் என்னும் எழுவாய் விருவித்துரைக்கப்பட்டது. அவன் என்றது இந்திர சித்தனை. ‘நன்று அது புரிதிர்’ என்பது இராமனின் இசைவு மொழி. வீடணனுடன் இலக்குவன் முதலியோரையும் சேர்த்துக் கூறுவதால் ‘புரிதிர்’ எனப் பலர்பாலாற் கூறினான். நாயகன் - தலைவன் - இராமன். |
(2) |
இராமன் இலக்குவனுக்கு அம்பு விடுவது பற்றி அறிவுறுத்தல் |
8936. | தம்பியைத் தழுவி, ஐய! தாமரைத் தவிசின் மேலான் வெம் படை தொடுக்கும்ஆயின், விலக்குமது அன்றி, வீர! |