பக்கம் எண் :

772யுத்த காண்டம் 

உன்னுடைய   வில்    வலிமையினாலே;  புக்கவன்  ஆவிகொண்டு
போதுதி
 -  (நின்மேற்  போர்  செய்யப்) புகுந்தவனது  ஆவியினைக்
கவர்ந்து கொண்டு மீள்வாயாக;
 

                                                  (4)
 

8938.
 

‘வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து, மாள,
கல்லுதி, தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு;
பல் பெரும் போரும் செய்து வருந்தி; அற்றம் பார்த்து
கொல்லுதி, அமரர்தங்கள் கூற்றினை-கூற்றம் ஒப்பாய்!
 

கூற்றம்   ஒப்பாய் -  (பகைவர்க்கு)   இயமனைப்  போன்றவனே!
தருமமென்னும்  கண்  அகன்  கருத்தைக் கண்டு -  இவ்விடத்திற்கு
இது தருமம்  என்னும்  விரிவான  அறக்கோட்பாடுகளை   (நுட்பமாகக்)
கண்டு  (அதன்  வழி  நின்று);  வல்லன  மாய  விஞ்சை  வகுத்தன
அறிந்து
- (இந்திரசித்து  தான் பயின்று)  கைவந்த  மாயச் செயல்களாக
வகைபெற  இயற்று   முன்னரே    (குறிப்பினால்)    அறிந்து;   மாள,
கல்லுதி
- (அவையெல்லாம்)  அறவே  கெட்டொழியுமாறு   (வேருடன்)
பெயர்த்தெறிவாயாக;  பல்பெரும்  போரும் செய்து - பல்வகைப்பட்ட
பெரிய போர்த் தொழில்களையும் செய்து; வருந்தின அற்றம் பார்த்து-
தளர்ச்சியுற்ற   சமயம்    பார்த்து;   அமரர்   தங்கள்  கூற்றினைக்
கொல்லுதி  
  -    தேவர்களுக்குக்     கூற்றுவனாக   விளங்குகின்ற
அவ்விந்திரசித்தனைக் கொல்வாயாக;
 

போரும் செய்து  வருந்தலை  என்பதற்குப் பதிலாக வருந்தின எனப்
பாடம் கொள்ளப்படுகின்றது.
 

                                                  (5)
 

8939.

‘பதைத்து அவன், வெம்மை ஆடி, பல் பெரும் பகழி மாரி
விதைத்தவன் விதையாநின்று விலக்கினை, மெலிவு மிக்கால்,
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக் கழிய ஓட்டி,
வதைத் தொழில் புரிதி-சாப நூல் நெறி மறப்பிலாதாய்!