பக்கம் எண் :

774யுத்த காண்டம் 

கடுப்பினும்   அளவு  இலாத கதியினும் - தக்க விரைவுடனும் அளவு
இல்லாத  கதியினோடும்; கணைகள்  காற்றின்  விடுப்பன்  அவற்றை
நோக்கி விடுதியால்
-  அம்புகள் காற்றைப் போன்று விடுப்பன வற்றை
(கூர்ந்து) நோக்கி (அவன்மேல்) செலுத்துவாயாக.
 

                                                  (7)
 

                   திருமாலின் வில் முதலியன இராமன் கொடுத்தல்
 

8941.
 

என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி, ஏற்ற
முன்பனை நோக்கி, ‘ஐய! மூவகை உலகும் தான் ஆய்
தன் பெருத் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும்
வன் பெருஞ் சிலை ஈது ஆகும்; வாங்குதி; வலமும்
                                கொள்வாய்!
 

என்பன   முதல்  உபாயம்   யாவையும்   இயம்பி   -   என
மேற்கூறியனவாகிய   உபாயங்கள்    யாவற்றையும்    (இலக்குவனுக்கு)
எடுத்துக்  கூறி;  ஏற்ற  முன்பனை  நோக்கி  - (தான்  கூறியவற்றை
விரும்பி) ஏற்றுக் கொண்ட வலிமிக்கோனாகிய இலக்குவனை   (மீண்டும்)
நோக்கி;  ஐய!  மூவகை உலகும்  தான்  ஆய்  -  ஐயனே! மூவகை
உலகங்களும்  தானே  ஆகி;  தன்  பெருந்தன்மை தானும் அறிகிலா
ஒருவன்
  -  தனது  பெருமையினைத்   தானும்   அறியாத  ஒப்பற்ற
தலைவனாகிய  திருமால்;தாங்கும்  வன்பெரும் சிலை ஈது ஆகும் -
(தன்  கையில்)  ஏந்திய  பெரிய  வில் இதுவாகும்; வாங்குதி  வலமும்
கொள்வாய்
  -   இதனை   நின்கையில்  வாங்குவாயாக   (இதனால்)
வெற்றியும் கொள்வாயாக;
 

இறைவன்   தன்னினும் பிறிதுபொருள்  தனக்கு  ஒப்பு நோக்கவின்றி
நின்ற  ஒருமையன்  ஆகலின், ‘தன்  பெருந்தன்மை  தானும்  அறிகிலா
ஒருவன்’  என்றார்.  “தன்பெருமை  தானறியாத்  தன்மையன் சாழலோ”
(திருவாசகம் திருச்சாழல் - 19) என்பது ஒப்பு நோக்கத்தக்கது.
 

                                                  (8)
 

8942.

‘இச் சிலை இயற்கை மேல்நாள்; தமிழ் முனி இயம்பிற்று
                                       எல்லாம்
அச்செனக் கேட்டாய் அன்றே? ஆயிரம் மௌலி அண்ணல்