பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 775

      

மெய்ச் சிலை; விரிஞ்சன் தானே வேள்வியின் வேட்டுப்
                                        பெற்ற
கைச் சிலை கோடி’ என்று கொடுத்தனன்,
                              கவசத்தோடும்.
 

இச்சிலை  இயற்கை மேல் நாள் - இந்த வில்லினுடைய இயல்பைக்
குறித்து முன்னொரு நாள்;தமிழ் முனி  இயம்பிற்று எல்லாம் -  தமிழ்
முனிவராகிய அகத்தியர்  கூறியவற்றை எல்லாம்;அச்செனக்  கேட்டாய்
அன்றே?
  -   உறுதியுடைய    சொற்களாக    (நின்   உள்ளத்தில்)
பதியும்படியாகக்   கேட்டாயல்லவா?  ஆயிரம்  மௌவி   அண்ணல்
மெய்ச்சிலை
 -  ஆயிரம்   திருமுடிகளை   உடைய  திருமால்  (தன்)
திருமேனியில்   கொண்ட   வில்லாகிய   இது;   விரிஞ்சன்   தானே
வேள்வியில்  வேட்டுப்பெற்ற  கைச்சிலை
 -  பிரமதேவனே  (தான்
செய்த)  வேள்வியில்  விரும்பிப் பெற்ற கைவில்லாகும்; கோடி  என்று
கவசத்தோடும் கொடுத்தனன்
- (இதனை) ஏற்றுக் கொள்வாயாக என்று
(அதன்   பெருமையைக்)   கூறி   (தனது)    போர்க்   கவசத்தோடும்
(இலக்குவனுக்கும்) கொடுத்தான் (இராமன்)
 

சிலை   - வில். தமிழ் முனி - அகத்தியர். சிவபெருமானிடம்  தமிழ்
கற்று  ‘என்றுமுள  அத்தென்தமிழை   இயம்பி  இசை   கொண்டதால்’
இப்பெயர்  பெற்றார்.  அச்சு  -  வலிமை,   உறுதி.  “ஆயிரம் ஞாயிறு
போலும்  ஆயிரம்  நீள்   முடியானும்”  (தேவா  -4-4-8)   என்றவாறு
எண்ணிலா முடிகளை உடைய இறைவனை  “ஆயிரமௌலி  அண்ணல்”
எனக்  குறித்தார்.  விரிஞ்சன் -  பிரமன்.  திருமாலிடமிருந்த வில்லினை
பிரமன்  வேள்வி  செய்து  வேண்டிப்பெற்று  அகத்தியரிடம்  கொடுக்க,
அவர்   அதனை   இராமனுக்கு   அளிக்க,    அதனை   இப்பொழுது
இலக்குவனுக்கு, கவசத்தோடும் கொடுத்தனன் என்பது வில் வரலாறு.
 

                                                  (9)
 

8943.

ஆணி, இவ் உலகுக்கு, ஆன ஆழியான் புறத்தின்
                                     ஆர்த்த
தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும்
                                     சொல்லி,
தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன்;
                                தழுவலோடும்,
சேண் உயர் விசும்பில் தேவர், ‘தீர்ந்தது எம் சிறுமை’
                                     என்றார்.