பக்கம் எண் :

776யுத்த காண்டம் 

இவ்வுலகுக்கு  ஆணி   ஆன  ஆழியான்  -  இவ்  உலகினுக்கு
அச்சாணி  போல  நின்று   முறைப்படுத்துகின்ற   சக்கரப்  படையினை
உடைய   (திருமாலாகிய)  இராமன்; புறத்தின்   ஆர்த்த   தூணியும்
கொடுத்து
- தன்  முதுகிற்  கட்டியுள்ள அம்புப் புட்டிலையுங் கொடுத்து;
மற்றும்   உறுதிகள்  பலவும்  சொல்லி -  மற்றும் உறுதி மொழிகள்
பலவும்  கூறி;   தாணுவின்   தோற்றத்   தானைத்   தழுவினன் -
சிவபெருமானைப் போன்ற தோற்றத்தை உடையவனான   இலக்குவனைத்
தழுவிக்கொண்டான்; தழுவலோடும் சேண் உயர் விசும்பில் தேவர் -
அங்ஙனம் தழுவி (ப் போர்க்கு) விடை  கொடுத்தவுடனே  மிக  உயர்ந்த
விண்ணுலகவராகிய  தேவர்கள்;  தீர்ந்தது  எம்  சிறுமை என்றார -
எம்முடைய துன்பம் தொலைந்தது என்று கூறி மகிழ்ந்தனர்.
 

ஆணி   -   தேரின்   சக்கரம்   கழலாதபடி   அச்சின்  கடையிற்
செருகப்படுவது.  தேரின்  இயக்கம்   தடைப்படாமல்  நின்று  காப்பது.
இங்ஙனமே   உலகம்  இடையூறின்றி  இயங்குதற்குத் தோன்றி நிற்றலின்
இராமனை  “இவ்வுலகுக்கு  ஆணி  ஆன ஆழியான்” என்றார். புறம் -
முதுகு.   ஆர்த்த  -  கட்டிய.   தூணி  -   அம்புப்புட்டில்  தாணு  -
சிவபெருமான்.  அப்பெருமான்   “செம்மேனி அம்மான்”  ஆகையினால்
அந்நிறத்தினைக்  கொண்ட   இலக்குவனை  “தாணுவின் தோற்றத்தான்”
என்றார்.    சிறுமை   -   துன்பம்.    இந்திரசித்தனால்    அடியுண்ட
அவமானத்தால் ஏற்பட்ட நாணம் எனினுமாம்.
 

                                                  (10)
 

                                        நிகும்பலை செல்லுதல்
 

8944.

மங்கலம் தேவர் கூற, வானவ மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி, பலாண்டு இசை பரவ,-பாகத்
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன்-போர்மேல்
                                       போவான்.
 

தேவர்  மங்கலம்  கூற  வானவ மகளிர் வாழ்த்தி -  தேவர்கள்
மங்கலம்  கூறி  வாழ்த்தவும் தேவமகளிர் வாழ்த்தி; பங்கம் இல்  ஆசி
கூறிப் பலாண்டு இசை  பரவ
 -  குற்றமில்லாத  ஆசிகளைக்   கூறி
பல்லாண்டு  என்னும் இசை பாடிப் பரவவும்; போர் மேல் போவான் -
போர்மேற்  செல்வானாகிய  இலக்குவன்;  பாகத்  திங்களின்  மோலி
அண்ணல்
- பிறை சூடிய சடையனாகிய சிவ