| நிகும்பலை யாகப் படலம் | 777 |
பெருமான்; திரிபுரம் தீக்கச் சீறிப் - முப்புரங்களையும் சுட்டெரிக்கச் சினந்து;பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் - பொங்கி எழுந்தான் என்னும் தோற்றமுடையவனாய் விளங்கினான் | (11) | 8945. | ‘மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும். வீர! நீ சேறி’ என்று விடை கொடுத்தருளும் வேலை, ஆரியன் கமல பாதம், அகத்தினும் புறத்தும் ஆக, சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன். | மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் - அனுமனை முதலாகக் கொண்ட வானரப் படைத்தலைவர்களோடும்; வீர! நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை - வீரனே! நீ போருக்குச் செல்வாயாக என்று (இராமன்) விடை கொடுத்தருளிய பொழுது; ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக - பெரியோனாகிய இராமனின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அகத்தும் புறத்தும் அமைய; சீரிய சென்னி சேர்த்து தருமச் செல்வன் சென்றனன் - சிறப்புடைய தன் தலையிற் பொருந்த வைத்துத் தருமத்திற்குச் செல்வம் போன்றவனாகிய இலக்குவன் (நிகும்பலைக்குச்) சென்றான். | ஆரியன் - பெரியோன். கமல பாதம் - கமலம் போன்ற திருவடிகள். அகத்திலும் - நெஞ்சகத்திலும், புறத்திலும் - புறத்தில் புலப்படும்படியாக நாவால் வாழ்த்தியும் - என்றவாறு. திருவடிகளைச் சூடும் சீர்மையால் சீரிய சென்னி என்றார். சென்னி - தலை. தருமத்தின் செல்வம் போன்றவனாகலின் இலக்குவனைத் தருமச் செல்வன் என்றார். | (12) | 8946. | பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன், பொருமி, கண்ணீர் நிலம் கொண்டு படர நின்று, நெஞ்சு அழிவானை, தம்பி வலம் கொண்டு, வயிர வல் வில் இடம் கொண்டு, வஞ்சன்மேலே, சலம் கொண்டு, கடிது சென்றான், ‘தலை கொண்டு வருவென்’ என்றே. |
|
|
|