பக்கம் எண் :

778யுத்த காண்டம் 

பொலங்கொண்டல்   அனைய   மேனிப்புரவலன்  -   அழகிய
மேகத்தைப்  போன்ற மேனியை உடைய இராமன்; பொருமி,  கண்ணீர்
நிலம்  கொண்டு  படர  நின்று
 -  (உள்ளம்) விம்மிக் கண்ணின் நீர்
ஒழுகி  நிலத்திற்  படர்ந்து  செல்லும்படி நின்று; நெஞ்சு  அழிவானை,
தம்பி  வலம் கொண்டு
- (பிரிவால்) மனம் கலங்குகின்றவனைத்  தம்பி
(இலக்குவன்) வலம்  வந்து வணங்கி; வயிரவல்வில் இடம் கொண்டு -
(அவன்  தந்த)  திண்மையான  வலிய வில்லினைத்  தன்  இடக்கையில்
கொண்டு;  வஞ்சன்  மேலே   சலம்   கொண்டு   -   வஞ்சனைத்
திறமுடையவனாகிய   இந்திரசித்தன்   மேல்  சினங்கொண்டு;    தலை
கொண்டு  வருவன் என்றே  கடிது சென்றான்
- அவனது தலையைக்
கொண்டுவருவேன் என்று சொல்லி விரைந்து சென்றான்.
 

                                                  (13)
 

8947.

தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்வான்,
ஊன் பிரிகின்றிலாத உயிர் என, மறைதலோடும்
வான் பெரு வேள்வி காக்க; வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான்.
 

தான்   பிரிகின்றிலாத  தம்பி   வெங்கடுப்பின்  செல்வான் -
தன்னாற் பிரிந்துறைதல்   இயலாத   (தன்)  தம்பி  இலக்குவன்  மிக்க
விரைவுடன்  செல்பவன்;    ஊன்    பிரிகின்றிலாத   உயிர்  என
மறைதலோடும்
 -  உடம்பினை   விட்டுப்  பிரிதலாற்றாத   உயிரைப்
போன்று   மறைந்த  அளவில்;  தான்  வளர்கின்ற  பருவநாளில் -
இராமனாகிய  தான்  வளர்ந்து  வருகின்ற  இளம்  பருவத்திலே; வான்
பெருவேள்வி   காக்க 
-  (விசுவாமித்திரனது)    உயர்ந்த   பெரிய
வேள்வியைக்   காத்தற்பொருட்டு;   பிரிந்து   ஏகக்கண்ட  தயரதன்
தன்னை  ஒத்தான்
 -   பிரிந்து  செல்லுதலைக்   கண்ணுற்ற  தந்தை
தயரதனை ஒத்துத் தோன்றினான்.
 

                                                 (14)
 

            நிகும்பலையில் வானரர் அரக்கர் சேனைனயக் காணுதல்
 

கலி விருத்தம்
 

8948.

சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார், நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்,