| கான் ஆர் நெறியும் மலையும் கழியப் போனார்கள், நிகும்பலை புக்கனரால். |
சேனாபதியே முதல் சேவகர் தாம் ஆனார் - படைத்தலைவன் (நீலன்) முதலான வானர வீரர்கள் ஆனார்; நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் - நீண்டு எரியும் தீக்கொள்ளியினைக் கொண்ட அங்கையினராய்;கான் ஆர் நெறியும் மலையும் கழியப் போனார்கள் - காட்டிற் பொருந்திய வழியும் மலையும் கழிந்து பிற்பட (விரைந்து) சென்றார்கள்; நிகும்பலை புக்கனரால் - நிகும்பலை என்னும் வேள்விக் களத்தில் புகுந்தார்கள். |
(15) |
8949. | உண்டாயது ஓர் ஆல், உலகுள் ஒருவன் கொண்டான் உறைகின்றதுபோல் குலவி, விண்தானும் விழுங்க விரிந்ததனைக் கண்டார்-அவ் அரக்கர் கருங் கடலை. |
உலகு ஒருவன் உள் கொண்டான்- உலகங்களை எல்லாம் ஒப்பற்ற திருமால் தன் திருவுந்தியுள் அடக்கி; உறைகின்றது போல் ஓர் ஆல் உண்டாயது - (தான்) தங்கி இருப்பது போன்ற (இலைகளைக் கொண்ட) ஓர் ஆலமரம் அங்கு உளதாயது; அவ் அரக்கர் கருங்கடல் குலவி - (அங்கு) அந்த அரக்கர் சேனையாகிய கரிய கடல் விளங்கி நிற்க; விண்தானும் விழுங்க விரிந்தனைக் கண்டார் - விண்ணின் பரப்பும் தன்னுள் அடங்குமாறு விரிந்து பரந்திருப்பதனைக் (வானரர்) கண்டார். |
ஊழிக்காலத்தில் உலகங்களையெல்லாம் தன் வயிற்றுள் அடக்கிக் காத்து பெருங்கடல் நடுவணதோர் ஆலிலையின் மீது பெருமாள் பள்ளி கொண்டிருப்பார் என்பது புராணம். அத்தகு ஆலிலை போன்ற ஆலிலைகளைத் தன்னிடத்துக் கொண்டதாய் விண்ணை அளாவி அதன் பரப்பினை உட்கொண்டதாய் அரக்கர் சேனை தன் அடியிடத்துக் குலவி இருப்பதாய் நின்றதொரு பெரும் ஆலவிருட்சத்தை வானரர் கண்டனர் என்பதாம். இச்செய்யுள் வந்த “கண்டார்” எனும் பயனிலையைப் பின்வரும் செய்யுட்கள் நான்கிலும் உள்ள, “ஓர்பான்மையதை’ ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை’ ‘சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை’ ‘கடல் போல்வதோர் பான்மையதை’ என வரும் செயப்படு பொருளோடும் கூட்டி முடிக்க. |
(16) |
8950. | நேமிப் பெயர் யூகம் நிரைத்து, நெடுஞ் சேமத்தது நின்றது, தீவினையோன் |