பக்கம் எண் :

78யுத்த காண்டம் 

மதக்   களிப்பு  மிக்க  ஆண்  யானைகளின்,  பின்புறம்  பிடியோடு
நிகர்த்தன
- பின்புறம் செல்லும் பெண் யானைகளை ஒத்தன;

மேகங்கள்     பெண்  யானையை  ஒத்தன என்றார் அடியோடல் -
விரைந்து  அடியிட்டுச்  செல்லல்.  மதக்களி   யானைகளின்  பின்புறம்
அடியோடு  பிடியோடு  நிகர்த்தன என்று கொண்டு  கூட்டி,  அடியோடு
என்பதற்கு  -  அடிச்சுவட்டின்  வழியே தொடர்ந்து  விரைந்து  என்று
பொருளுரைப்பினும் ஆம். தடி - தடித்து, மின்னல்;  தாரை -  ஒழுங்கு,
கொண்மு  -  கொண்மூ - மேகம் - குறுக்கல்  விகாரம். தற்குறிப்பேற்ற
அணி.

                                                  (23)

7750.தாறு ஆடின மால் கரியின்புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்,
ஆறு ஆடின, பாய் பரி, யானைகளும்;
சேறு ஆடின, சேண் நெறி சென்ற எலாம்.

தாறு ஆடின மால்கரியின் - அங்குசத்தால் பலமுறை குத்தப்பட்ட
மத   மயக்கம்   கொண்ட   யானைகளின்;   புடை  தாழ்  மாமதம்
மண்டுதலால்
 -  பக்கங்களில்  (இரு  கன்னங்களில்) இருந்து பெருகி
வருகின்ற   மதநீர்  ஒன்றின்  ஒன்று  மிக்குப்  பெருகி  நிறைதலால்;
பாய்பரி   யானைகளும்   ஆறு  ஆடின  -   பாய்ந்து  செல்லும்
தன்மையுள்ள  குதிரைகளும்  யானைகளும்   (அந்த  மதநீர் ஆற்றில்)
குளித்தன;  சேண்  நெறி சென்ற எலாம் சேறு ஆடின - (அதனால்)
(அவை) சென்ற நெடு வழி எல்லாம் சேறாகி விட்டன.

தாறு     ஆடுதல் - அங்குசத்தல் பலமுறை குத்தப்படுதல், தாறு -
அங்குசம்.  மதம்  மாறாடுதல்  -  மதநீர்  ஒன்றின்   ஒன்று  மிக்குப்
பெருகுதல்.  யானைகளுக்கு  மூன்று  வகை  மதம் கூறப்படும் அவை
கன்ன  மதம். கபோல மதம், பீஜமதம் என்பன. ஈண்டுக்  கன்ன மதம்
கூறப்பட்டது.   ஆறு   ஆடின  -  ஆற்றின்  கண்ணே   குளித்தன.
மண்டுதல் - நிறைதல்.

                                                  (24)

7751.தேர் சென்றன, செங் கதிரோனொடு சேர்
ஊர் சென்றனபோல்; ஒளி ஓடைகளின்
கார் சென்றன, கார் நிரை சென்றனபோல்;
பார் சென்றில, சென்றன பாய் பரியே.

செங்கதிரோனொடு  சேர்  ஊர்   சென்றன  போல் - சிவந்த
கதிர்களை உடைய கதிரவனொடு சேர்ந்து ஊர்கோள் சென்றன