| ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே பாமக் கடல் நின்றது ஓர் பான்மையதை. | தீவினையோன் ஓமத்து அனல் - கொடுவினையாளனாகிய இந்திரசித்தனுடைய வேள்வித்தீயினை; நேமிப்பெயர் யூகம் நிரைத்து - சக்கர வியூகம் என்னும் பெயருடைய அணி பெற வகுத்து; நெடுஞ்சேமத்து நின்றது - (சூழ்ந்து) நீண்ட பாதுகாப்புடையதாய் நின்றதாகிய (அரக்கர்) சேனை; வெவ் வடவைக்கு உடனே - வெம்மை மிக்க வடவைத் தீயைத் தன்னுட்கொண்டு; பாமக்கடல் நின்றது ஓர் பான்மையதை - பரவிய அக்கடல் நின்றதோர் தன்மை உடையதனை (வானர வீரர் கண்டார்) | (17) | 8951. | கார் ஆயனி காய் கரி, தேர், பரிமா, தார் ஆயிர கோடி தழீஇயதுதான், நீர் ஆழியொடு ஆழி நீறீஇயதுபோல், ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை, | கார் ஆயின காய்கரி - கரிய மேகத்தை ஒத்த வெகுளுந் தன்மையினை உடைய யானை; தேர், பிரமா, தார்ஆயிர கோடி தழீஇயது தான் - தேர், குதிரை, காலாள் ஆகிய ஆயிரங்கோடி சேனைகளைத் தன்பாற் கொண்டதாய்; நீர் ஆழியோடு ஆழி நீறீ இயது போல் - நீர்த்தன்மையதாகிய கடலோடு (வேறொரு) கடலை நிறுத்தியது போன்று; ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை- ஓராயிரம் யோசனை தூரம் பரவியுள்ளதனை (வானர வீரர் கண்டார்). | (18) | 8952. | பொன்-தேர், பரிமா, கரிமா, பொரு தார் எற்றே? படை வீரரை எண்ணிலமால்! உற்று ஏவிய யூகம் உலோகமுடைச் சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை. | பொன் தேர்,பரிமா, கரிமா பொருதார் எற்றே? -பொன் மயமான தேர், குதிரை, யானையுடன் கூடிய பொருதல் தொழிலை உடைய தூசிப்படை எவ்வளவினது? படை வீரரை எண்ணிலமால் - சேனை வீரர்களை (அளவிட்டு) எண்ணுதற்கு இயலாதவரானோம்! உற்று ஏவிய யூகம் உலோகமுடைச் - பொருந்தி ஏவப்பட்ட சேனை அணிகள் உலகங்கள் ஒரு |
|
|
|