பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 781

சேரவந்து;  சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை -  சுற்றினாற்   போன்ற
ஆயிரக்கணக்கினவாக   வரிசைகள்  இடையிடையே  சுற்றி  நிற்பதனை
(வானர வீரர் கண்டார்).
 

                                                 (19)
 

8953.

வண்ணக் கரு மேனியின்மேல் மழை வாழ்
விண்ணைத் தொடு செம் மயிர் வீசுதலால்,
அண்ணல் கரியான் அனலம்பு அட, வெம்
பண்ணைக் கடல் போல்வது ஓர் பான்மையதை.
 

வண்ணக் கருமேனியின் மேல் - (அரக்கர்களின்) கருநிறம் வாய்ந்த
உடம்பின்மேல்; மழைவாழ் விண்ணைத் தொடு செம்மயிர் வீசுதலால்
- மேகம்   வாழ்கின்ற   ஆகாயத்தைத்   தொடும்  அளவில்  (உள்ள)
செம்மயிர்கள் (ஒளியை) வீசுதலால்; அண்ணல் கரியான் அனல் அம்பு
பட
 -  கரிய  திருமேனியை   உடைய  பெரியோனாகிய   இராமனது
தீக்கணை சுட்டு வெதுப்புதலால்; வெம்பண்ணைக் கடல் போல்வதோர்
பான்மையதை 
-  வெம்மையுற்ற   நீர்த்திரளைக்   கொண்ட  (கருங்)
கடலையொத்து   விளங்கும்   தன்மையினதாகிய  (நிகும்பலை என்னும்)
அதனை (வானரவீரர் கண்டார்).
 

                                                 (20)
 

8954.

வழங்கா நிலை நாண் ஒலி, வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக் குலமும்
தழங்கா, கடல் வாழ்வனபோல், தகை சால்
முழங்கா, முகில் ஒத்தன, மா முரசே.
 

சிலை   நாண்  ஒலி  வழங்கா -  (அரக்கர்கள் கையிற் கொண்ட)
விற்கள்,   நாணொலியை   வெளிப்படுத்தாதனவாய்;  வானில்  வரும்
பழங்கார்   முகம்  ஒத்த
 -  மேகத்தினிடத்தே  தோன்றும்  பழைய
இந்திரவில்லை ஒத்தன;  பண்ணைக்  குலமும்  கடல் வாழ்வனபோல்
தழங்கா
  -   (அவர்களுடைய)   வாத்தியத்  தொகுதிகளும்   கடலில்
வாழ்வனவற்றையொத்து   முழங்காமலிருந்தன;   தகைசால்  மாமுரசே
முழங்கா  முகில்  ஒத்தன
 - தகுதி வாய்ந்த பெரிய முரசங்களும் இடி
முழக்கஞ் செய்யாத மேகத்தை ஒத்தன.
 

                                                  (21)
 

8955.

வலியான இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடு்ங் கடல்தான் எனலாய்
ஒலியாது உறு சேனையை உற்று, ஒரு நாள்
மெலியாதவர் ஆர்த்தனர், விண் கிழிய.