ஒருநாள் மெலியாதவர் - ஒரு காலத்தும் தளர்ச்சியுறாதவராகிய வானர வீரர்கள்; வலியான இராகவன் வாய் மொழியால் - வலிமை மிக்கவனான இராமனின் ஆணையினால்; சலியாத நெடுங்கடல் தான் எனலாய் - அசையாது ஒலியடங்கிய பெரிய கடல் என்னும் படியாக; ஒலியாது உறு சேனையை உற்று விண் கிழிய ஆர்த்தனர் - ஆர்ப்பரவஞ் செய்யாது பொருந்தி இருந்த அரக்கர் சேனையை அடைந்து வான் முகடு கிழியும் படியாகப் பேராரவாரம் செய்தனர். |
(22) |
அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல் |
8956. | ஆர்த்தார் எதிர், ஆர்த்த, அரக்கர் குலம்; போர்த் தார் முரசங்கள் புடைத்த; புகத் தூர்த்தார் இவர், கற் படை; சூல் முகிலின் நீர்த் தாரையின், அம்பு அவர் நீட்டினரால். |
ஆர்த்தார் எதிர் அரக்கர் குலம் ஆர்த்த - ஆரவாரித்தவராகிய வானர வீரர்கட்கு எதிராக அரக்கர் குலம் ஆரவாரித்தன; தார்போர் முரசங்கள் புடைத்த - மாலை சூட்டப்பட்ட போர் முரசங்கள் (குணில் கொண்டு) முழக்கப்பட்டன; இவர், புக, கற்படை தூர்த்தார் - (வானர வீரர்களாகிய) இவர்கள் (பகைவர் சேனைமேற்) புகுமாறு கல்லாகிய படைக்கலங்களை (ச்சொரிந்து) நிரப்பினார்கள்; அவர், சூல் முகிலின் நீர்த்தாரையின் அம்பு நீட்டினரால் - (அரக்கராகிய) அவர்கள் கருக்கொண்ட மேகத்தினின்றும் பொழியும் நீர்த்தாரைகளையொப்ப அம்புகளைச் செலுத்தினார்கள். |
(23) |
8957. | மின்னும் படை வீசலின், வெம் படைமேல் பன்னும் கவி சேனை படிந்துளதால்- துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து அன்னங்கள் படிந்தனவாம் எனலாய். |
துன்னும் துறைநீர் நிறைவாவி தொடர்ந்து - (பலரும்) நெருங்கிச் சென்று படியும் துறைகளை உடைய நீர்நிறைந்த தடாகத்தின் மேல்; அன்னங்கள் படிந்தனவாம் எனலாய் - அன்னப் பறைவகள் தொடர்ந்து படிந்தன என்னும்படி; மின்னும் படை வீசலின் வெம்படை மேல் - ஒளிவீசும் படைக்கலங்களை வீசலினால் |