| நிகும்பலை யாகப் படலம் | 783 |
(அவ்) வரக்கர்களது கொடுமைமிக்க மிக்க சேனையின் மேல்; பன்னும் கவிசேனை படிந்துளதால் - (வீரத்தாற்) பாராட்டி உரைக்கப்படும் வானர சேனை மேற்சென்று தாக்கியது. | (24) | 8958. | வில்லும், மழுவும், எழுவும், மிடலோர், பல்லும், தலையும். உடலும், படியில் செல்லும்படி சிந்தின, சென்றனவால்- கல்லும் மரமும் கரமும் கதுவ. | கல்லும் மரமும் கரமும் கதுவ - (வானரர் வீசிய) கல்லும், மரமும், (அவர்தம்) கையும் பற்றித் தாக்கியதனால்; மிடலோர் வில்லும் மழுவும் எழுவும் - வலிமை வாய்ந்தவரான அரக்கருடைய வில்லும் மழுவும், எழுவும்; பல்லும், தலையும், உடலும் படியில் செல்லும்படி சிந்தின சென்றனவால் - பல்லும், தலையும், உடலும் பூமியிற் செல்லும்படி சிதைந்து சென்றன. | (25) | 8959. | வாலும், தலையும், உடலும், வயிறும், காலும், கரமும், தரை கண்டனவால்- கோலும், மழுவும். எழுவும், கொழுவும், வேலும், கணையும், வளையும் விசிற. | கோலும், மழுவும், எழுவும் கொழுவும், வேலும், கணையும் வளையும் விசிற - (அரக்கர்கள்) தண்டங்களையும், மழுப்படைகளையும், எழுக்களையும் கொழுக்களையும், வேல்களையும், அம்புகளையும், வளைகளையும் (வானரர் மேல்) எறிதலால்; வாலும், தலையும், உடலும், வயிறும், காலும், கரமும், தரை கண்டனவால் - (அவற்றின்) வாலும், தலையும், உடலும், வயிறும், காலும், கையும் (அறுபட்டு) தரையில் வீழ்ந்தன. | (26) | உடனே வேள்வியைச் சிதைக்குமாறு வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல் | 8960. | வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ நின்று இக் கடை தாழுதல் நீதியதோ? சென்று, இக்கடி வேள்வி சிதைத்திலையேல், என்று, இக் கடல் வெல்குதும் யாம்?’ எனலும், |
|
|
|