வீடணன் வென்றிச் சிலை வீரனை - வீடணன், வெற்றி மிக்க வில்வீரனாகிய இலக்குவனை (நோக்கி); நீ இக்கடை நின்று தாழுதல் நீதியதோ? - நீ இவ்விடத்து (இந்திரசித்தன் வேள்வியைச் சிதைக்காது) நின்று காலந்தாழ்த்துதல் முறையாகுமா? இக்கடி வேள்வி சென்று சிதைத்திலையேல் - இந்தக் காவல் மிக்க வேள்வியை மேற்சென்று சிதைத்து அழிக்காமல் விடுவாயாயின்; இக்கடல் யாம் என்று வெல்லதும்? எனலும் - (அரக்கர் சேனையாகிய) இக்கடலை நாம் எக்காலத்தில் வெல்ல வல்லோம்? எனக் கூறிய அளவில். |
(27) |
தேவர் முதலியோரும் வியந்து காண இலக்குவன் அரக்கர் சேனையை அழித்தல் |
8961. | தேவாசுரரும். திசை நான்முகனும், மூவா முதல் ஈசனும், மூஉலகின் கோ ஆகிய கொற்றவனும், முதலோர் மேவாதவர் இல்லை, விசும்பு உறைவோர்.* |
தேவாசுரரும் திசை நான்முகனும் - தேவர்களும், அசுரர்களும் திசைக்கு ஒருமுகமாக நாற்றிசைகளிலும் முகமுடைய பிரம தேவனும்; மூவாமுதல் ஈசனும் - (காலக் கட்டினுள் அடங்காத) மூத்தல் இல்லாத ஈசனும்; மூவுலகின்கோ ஆகிய கொற்றவனும் - மூவுலகின் தலைவனாகிய இந்திரனும்; முதலோர், விசும்பு உறைவோர் மேவாதார் இல்லை - முதலாக வானுறையும் தேவர்களில் (அங்கு) விரும்பிவந்து சேராதவர் யாருமில்லை. |
(28) |
8962. | பல்லார் படை நின்றது; பல் அணியால், பல் ஆர் படை நின்றது; பல் பிறை வெண் பல்லார் படை நின்றது; பல்லியம் உம்- பல் ஆர் படை நின்றது-பல் படையே.* |
பல்படையே பல்லார் படை நின்றது - பலவகைப்பட்ட (அரக்கர்) சேனைகளுள் (வீரர்) பலராற் செலுத்தப்படும் தேர்ப்படை நின்றது; பல்அணியால் பல் ஆர் படை நின்றது -பல வரிசையால் பொருந்திய குதிரைப் படை நின்றது;பல்பிறை வெண் பல்லார் படை நின்றது - பலபிறை போலும் வெண்மையான (கோரைப்) பற்களை உடைய அரக்கர் சேனையாகிய காலாட் |