படை நின்றது; பல்லியம் உம்பல் ஆர் படை நின்றது - பல வாத்தியங்களுடனே யானைகள் நிரம்பிய படை நின்றது |
இந்திரசித்தின் நால்வகைப் படைகளும் அவ்வேள்விக் களத்தைக் காத்து நின்றமை கூறப்பெற்றது. முதலடியில் பல்லார் படை என்றது தேர்ப்படையை. இரண்டாம் அடியில் வரும் ‘பல்லார் படை’ என்றது. ‘பல்லணி’ எனக் குறித்தமையால் குதிரைப் படையாயிற்று. மூன்றாம் அடியில் ‘பிறை வெண் பல்லார்’ எனக் குறித்தமையால் காலாட் படையாயிற்று. நான்காம் அடியில் ‘உம்பல் ஆர்படை’ என்றமையால் யானைப்படை கூறியதாயிற்று. இங்ஙனம் நால்வகைப் படையும் காத்து நின்ற களத்தில் இலக்குவன் போராற்றப் புறப்பட்டான் என்க. பல்அணி - பலவரிசை. இச்செய்யுள் ‘யமகம்’ என்னும் சொல்லணியும், சொற்பொருட்பின்வரு நிலையணியும் தழுவி அமைந்துள்ளது. |
(29) |
8963. | அக் காலை, இலக்குவன், அப் படையுள் புக்கான், அயில் அம்பு பொழிந்தனனால்; உக்கார் அவ் அரக்கர்தம் ஊர் ஒழிய, புக்கார், நமனார் உறை தென் புலமே. |
அக்காலை இலக்குவன் அப்படையுள் புக்கான் - அப்பொழுது இலக்குவன் அந்த (அரக்கர்) சேனையுட் புகுந்தான்; அயில் அம்பு பொழிந்தனனால் - கூரிய முனையினை உடைய அம்புகளை (மழைபோல்) மிகுதியாகச் சொரிந்தான்; உக்கார் அவ் அரக்கர தம்ஊர் ஒழிய - (அதனால் உடம்பு) சிதைந்தொழிந்தவர்களாகிய அவ்வரக்கர்கள் தமது ஊராகிய இலங்கையை விட்டு; நமனார் உறை தென்புலமே புக்கார் - இயமன் உறையும் தென் திசைக் கண்ணதாகிய உலகினை அடைந்தார்கள். |
(30) |
8964. | தேறா மா மால் கரி, தேர், பரிமா நூறாயிர கோடியின் நூழில்பட, சேறு ஆர் குருதிக் கடலில், திடராய்க் கூறு ஆய் உக, ஆவி குறைத்தனனால். |
தேறா மதமால் கரிதேர் பரிமா - தெளியாத மதச் செருக்குடைய பெரிய யானை தேர், குதிரை ஆகிய சேனைகள்; நூறாயிர கோடியின் நூழில் பட - நூறாயிரங்கோடி என்னும் தொகையினவாய்க் கொன்று குவிக்கப்படவும்; சேறு ஆர் குருதிக் கடலில் திடராய்க் - சேறாகப் பொருந்திய இரத்தக் கடலிலே |