பக்கம் எண் :

788யுத்த காண்டம் 

காம்பு   அறுபட்டு விழுந்து; அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் -
அவ்வரக்கரது   இரத்த   வெள்ளத்துள்  அழுந்துதலால்;  செந்நாகம்
விழுங்கிய   திங்களினை   ஒத்தனவால்
  -  செந்நிறப்  பாம்பினால்
விழுங்கப்பட்ட சந்திரனை ஒத்தன.
 

                                                 (36)
 

8970.

கொடு நீள் கரி, கையொடு தாள் குறைய,
படு நீள் குருதிப் படர்கின்றனவால்,
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்,
நெடு நீரின் இடங்கர் நிகர்த்தனவால்.
 

கொடுநீள்  கரி,  கையொடு  தாள் குறைய - கொடிய யானைகள்
நீண்ட   துதிக்கையுடன்    கால்களும்    அறுபட்டமையால்;   படுநீள்
குருதிப்   படர்கின்றனவால்
 -  அங்கு  உண்டாகிய  நீண்ட  குருதி
வெள்ளத்தில்  செல்வன்; அடுநீள்  உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
- (பகைவரை)  அடுதற்குரிய   ஆற்றல்   மிக்க  உயிர்  இல்லாமையால்
(அக்குருதி   வெள்ளத்தில்)   ஆழாதனவாயின;   நெடுநீரின் இடங்கர
நிகர்த்தனவால்
-  (அவை)  கடலிடத்தே   உள்ள  இடங்கர்  என்னும்
முதலையை ஒத்துத் தோன்றின.
 

                                                 (37)
 

8971.

கரி உண்ட களத்திடை உற்றன, கார்
நரி உண்டி உகப்பன நட்டனவால்;
இரியுண்டவர் இன் இயம் இட்டிடலால்,
மரியுண்ட உடற் பொறை மானினவால்.
 

கரி  உண்ட  களத்திடை  உற்றன  கார்  நரி  - யானைகளைத்
தன்பாற்  கொண்ட  போர்க்களத்தின்  கண்னே  புகுந்தனவாகிய  கரிய
நரிகள்; உண்டி  உகப்பன நட்டனவால் - உணவை விரும்பின வாய்த்
தங்கின; இரியுண்டவர்  இன் இயம் இட்டிடலால்  -  நிலை  கெட்டு
ஓடிய  அரக்கர்களின்  இனிய  பறைகள்; மரியுண்ட  உடற்   பொறை
மானினவால்
-    (அவர்களால்)     விடப்பட்டமையால்      இறந்த
உடற்பொறையை ஒத்தன.
 

                                                 (38)
 

8972.

வாயில் கனல் வெங் கடு வாளிஇனம்
பாய, பருமக் குலம் வேவனவால்,
வேய் உற்ற நெடுங் கிரி மீ வெயில் ஆம்
தீ உற்றன ஒத்த-சினக் கரியே.