போல; தேர் சென்றன - (அதிகாயனுடைய) தேரைச் சூழ்ந்து பல தேர்கள் சென்றன, கார் நிரை சென்றன போல் - (மின்னலுடன்) கரிய மேகக் கூட்டங்கள் சென்றன போல்; ஒளி ஓடைகளின் கார் சென்றன - ஒளி பொருந்தி முகபடாம் அணிந்த யானைகள் சென்றன; பாய் பரியே பார் சென்றில சென்றன - பாயும் தன்மை உள்ள குதிரைகள் பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன.
|
அதிகாயன் தேரைப் பல தேர்கள் சூழ்ந்து செல்லுவதற்குச் கதிரவனோடு சேர்ந்து செல்லும் ஊர்கோள் உவமை, ஊர்கோள் - இக்காலத்துக் கோட்டை என வழக்கு. சூரியன் கோட்டை போட்டால் ஓரிரு நாளில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நெற்றிப்பட்டத்துடன் யானைகள் செல்லவதற்கு மின்னலுடன் கரிய மேகங்கள் செல்லவது உவமை. பார்சென்றில - பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன. பாய்பரி - வினைத் தொகை.
|
(25)
|
கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல்
|
| 7752. | மேருத்தனை வெற்புஇனம் மொய்த்து, நெடும் பாரில் செலுமாறு படப் படரும் தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண் போர் முற்று களத்திடைப் புக்கனனால்.
|
மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து - மேரு மலையின் அளிவுள்ள மலைகளின் கூட்டம் நெருங்கி; நெடும் பாரில் செலுமாறு படப் - பெரிய நிலவுலகில் செல்லும் தன்மை போல; படரும் தேர் சுற்றிடவே - செல்லுகின்ற தேர்கள் சுற்றி நிற்க; கொடு சென்று - (தன் படைகளைச் செலுத்திக்) கொண்டு சென்று; முரண் போர் முற்று களத்திடைப் புக்கனனால் - (மாறுபாடு முற்றுகிற) போர்க் களத்திற்கு (அதிகாயன்) போய்ச் சேர்ந்தான்.
|
மேரு மலையைப் பிற பெரிய மலைகள் சூழ்ந்து நிற்பது அதிகாயன் தேரைப் பிற தேர்கள் சூழ்ந்து நிற்பதற்கு உவமை. வெற்பு - மலை. மொய்த்து - நெருங்கி, மேருத்தனை - மேருவை தன் என்பது சாரியை. செலுமாறுபட - செல்லும் தன்மை ஒப்ப. கொடு - இடைக்குறை, ஆல் - அசை.
|
(26)
|
| 7753. | கண்டான், அவ் இராமன் எனும் களி மா உண்டாடிய வெங் களன் ஊடுருவ; |