அலைய வெங்கால் பொர - (யாவும் நிலை பெயர்ந்து) அலையுமாறு (ஊழிக்காலத்துக்) கடுங்காற்று வீசித்தாக்குதலால்; மலைகளும், மழைகளும், வான மீன்களும் அழிந்த ஆம் என - மலைகளும், மேகங்களும், விண்மீன்களும் அழிந்து வீழ்ந்தன என்னும்படி; தாவுவ சரமும், தலைகளும் உடல்களும் - தாவிப் படர்வனவாகிய அம்புகளும் (அவற்றால் எய்யப்பட்ட அரக்கர்களின்) தலைகளும் உடல்களும்; உலைகொள் வெங்கனல் பொதி ஓமம் உற்றவால் - உலைக்களத்தின் இயல்பினைக் கொண்ட வெம்மை மிக்க தீ நிறைந்த ஓம குண்டத்தில் வீழ்ந்தன. |
(44) |
8978. | வாரணம் அனையவன் துணிப்ப, வான் படர் தார் அணி முடிப் பெருந் தலைகள் தாக்கலால், ஆரண மந்திரம் அமைய ஓதிய பூரண மணிக் குடம் உடைந்து போயதால். |
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் - யானையை ஒத்தனவாகிய இலக்குவன் (அம்பினால்) துண்டித்துத் தள்ள விசும்பினின்றும் வீழும்; தார் அணி முடிப்பெருந் தலைகள் தாக்கலால் - மாலையினையுடைய முடி அணிந்த தலைகள் மோதித் தாக்குவதனால்; ஆரண மந்திரம் அமைய ஓதிய - வேத மந்திரங்களைப் பொருந்த ஓதி; பூரண மணிக்குடம் உடைந்து போயதால் - (நீர் நிறைந்து, யாக வேதிகையில்) அமைக்கப்பட்ட மணிகள் பொருந்திய நிறை குடம் உடைந்து போயிற்று. |
(45) |
8979. | தாறு கொள் மதகரி சுமந்து, தாமரை சீறிய முகத் தலை உருட்டி, செந் நிறத்து ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை யாறுகள் எழுங் கனல் அவியச் சென்றவால். |
செந்நிறத்து ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து - செந்நிறத்தினை உடைய (வடுப்பட்ட) புண்களிலிருந்து சுரந்து பெருகிய குருதியினாலாகிய; ஓங்கு அலை யாறுகள் - உயர்ந்து எழும் அலைகளை உடைய ஆறுகள்; தாறு கொள் மதகரி சுமந்து - அங்குசத்தாற் செலுத்தப் படுதலை உடைய மதயானைகளைச் சுமந்துகொண்டு; தாமரை சீறிய முகத்தலை உருட்டி - செந்தாமரைப் பூவினைச் சினந்த (செங்கண்களை உடைய) முகத்தோடு பொருந்திய (வீரர்களின்) தலைகளை உருட்டி; எழுங்கனல் அவியச் |