பக்கம் எண் :

792யுத்த காண்டம் 

சென்றவால்  -   (ஓமகுண்டத்தில்)   எழுந்து   எரியும்   வேள்வித்தீ
அவியும்படி சென்று பாய்ந்தன.
 

                                                 (46)
 

8980.

தெரி கணை விசும்பிடைச் சுமந்து, செம் மயிர்
வரி கழல் அரக்கர்தம் தடக் கை வாளொடும்
உரும் என வீழ்தலின், அனலிக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால்.
 

தெரிகணை விசும்பிடைச் சுமந்து - (இலக்குவன்) ஆராய்ந்து எய்த
அம்புகளால்  விசும்பின் கண்ணே சுமக்கப்பெற்று; செம்மயிர்  வரிகழல்
அரக்கர்  தம்  தடக்கை
- சிவந்த மயிரினையும் வரிந்து கட்டப்பெற்ற
வீரக்கழலையுடைய  அரக்கர்களுடைய  பெரிய   கைகள்;  வாளொடும்
உரும்   என  வீழ்தலின்
 -  (தாம்  பிடித்துள்ள)  வாட்படையுடனே
இடிபோன்று  (நிலத்தில்)  வீழ்தலால்;  அனலிக்கு ஓக்கிய எருமைகள்
மறிந்தன,   மறியும்,  ஈர்ந்தவால்
 -  தீக்கடவுளுக்கென  (யாகத்தில்)
உரிமை  செய்து  வைக்கப்பட்ட   எருமைகள்  (வெட்டுண்டு)  இறந்தன.
ஆடுகளும் (அவ்வாறே) பிளக்கப்பட்டு இறந்தன.
 

                                                 (47)
 

8981.

அம் கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம் கடம் கிழிந்திலர், அழிந்த ஆடவர்,
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின்
அங்கு அடங்கினர், தொடர் பகழி அஞ்சினார்.
 

அம்   கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின் நின்று - அழகிய
கன்னங்கள்   (கிழியப்பெற்று)   வழிகின்ற  குருதியுடன் பெரிய  அருவி
வீழ்கின்ற  குன்றினைப்  போல  (உயிர்  எஞ்சி)  நின்று;  அம்  கடம்
கிழிந்திலர்  அழிந்த ஆடவர்
- (தம்) அழகிய (திண்மையான) உடம்பு
கிழியப்பெறாது   (தோற்றழிவதால்)   நெஞ்சழிந்த   அரக்க   வீரர்கள்;
தொடர் பகழி அஞ்சினர் - (இலக்குவனது  வில்லினின்றும்) தொடர்ந்து
வரும்  அம்புகளுக்கு  அஞ்சியவர்களாய்;   அங்கு  அடங்கலும் படர்
குருதி    ஆழியின்    அங்கு   அடங்கினர் 
-  போர்க்களமாகிய
அவ்விடத்தில்   முழுதும்   பரவிய   குருதிக்  கடலினுள்ளே  அடங்கி
மறைந்தனர்.
 

                                                 (48)
 

8982.

கால் தலத்தொடு துணிந்து அழிய, காய் கதிர்க்
கோல் தலைத்தலை உற, மறுக்கம் கூடினார்,