பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 793

வேல் தலத்து ஊன்றினர், துளங்கு மெய்யினர்,
நாறு அலைக் குடலினர், பலரும் நண்ணினார்.*
 

கால்  தலத்தொடு  துணிந்து  அழிய  -  கால்கள்  தரையொடு
துணிக்கப்பட்டுச் சிதைந்து வீழ; காய்கதிர்க் கோல் தலைத் தலை உற
-   (இலக்குவன்    ஏவிய)    வெதுப்பும்  சுடரினையுடைய  அம்புகள்
மேன்மேலும்  வந்து  பொருந்த;  மறுக்கம் கூடினார் பலரும் துளங்கு
மெய்யினர்
 -   கலக்கமுற்றவர்களாகிய  அரக்கர்கள் பலரும் நடுங்கிய
உடம்பினராய்;   நாறு   அலைக்குடலினர்   -  (வயிற்றின்  புறத்தே)
வெளிப்பட்டு  அலைதலை   உடைய   குடரினை  உடையராய்;  வேல்
தலத்து  ஊன்றினர் நண்ணினார்
 -  (தம்  கையிற்  கொண்ட) வேற்
படையை  (ஊன்று  கோலாகக்  கொண்டு)  ஊன்றியவர்களாய் (வருந்தி)
அடைந்தார்கள்.
 

                                                 (49)
 

8983.

பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார்,
தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற,-
அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்-
தம் குடர் முதுகிடைச் சொரியத் தள்ளுவார்.
 

தம் குடர் முதுகிடைச் சொரியத்  தள்ளுவார் -   தமது  குடர்
முதுகின்   வழியாகவெளிப்பட்டுச்  சரிந்த  தொங்க,  (அதனை   ஒரு
கையினால்) உள்ளே தள்ளிக்கொண்டு  (மீளவும்  போர்முகஞ்) செல்லும்
அரக்கர்  வீரர்  சிலர்;  பொங்கு  உடல் துணிந்த  தம்  புதல்வர்ப்
போக்கிலார் 
-  வெகுண்டு   பொருது,   உடல்  துணிக்கப்பட்ட  தம்
அருமைப்  புதல்வரை  (அங்கேயே)  விட்டுச்  செல்ல  ஆற்றாதவராய்;
தொங்கு  உடல்  தோள்  மிசை  இருந்து  சோர்வுற
- தொங்கும்
இயல்பினதாகிய (அம்மைந்தரது)  உடம்பு   (தம்) தோள் மீதிருந்தவாறு
சோர்ந்து தொங்க; அங்கு உடல் தம்பியைத்   தழுவி  அண்மினார்
-  அவ்விடத்திற்   (பகைவரோடு)   பொருது  நிற்கும்     தம்பியைத்
தழுவிக்கொண்டு (பகைவர் சேனையை எதிர்த்து) நெருங்கினார்கள்.
 

                                                 (50)
 

8984.

மூடிய நெய்யொடு நறவம் முற்றிய
சாடிகள், பொரியொடு தகர்ந்து தள்ளுற,
கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய்
அறு குறை அறுக்கும் ஆக்கைகள்.