பக்கம் எண் :

794யுத்த காண்டம் 

நெய்யொடு   நறவு முற்றிய மூடிய சாடிகள் - நெய்யுடன்  தேன்
நிறைந்தனவாய்   மூடப்பட்டுள்ள   சாடிகள்;   தகர்ந்து  பொரியொடு
தள்ளுற
  -   உடைந்து   பொரிகளோடு   சிதைவுற்றுத்   தள்ளப்பட;
அறுகுறை  அறுக்கும்  ஆக்கைகள்  - தலையறுபட்ட குறையுடலாகிய
கவந்தங்கள்;  பல  கோடிகள் படும் குழாம் குழாங்களாய் ஆடின -
பல கோடியினைக் கொண்ட கூட்டம் கூட்டமாக ஆடின.
 

                                                 (51)
 

8985.

கால் என, கடு என, கலிங்கக் கம்மியர்
நூல் என, உடற் பொறை தொடர்ந்த நோய் என,
பால் உறு பிரை என, கலந்து, பல் முறை,
வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான்.
 

கால்என,  கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல் என -  காற்றினைப்
போலவும்,  நஞ்சினைப்  போலவும்,  ஆடை நெய்வோர்  (பாலிடையே
செலுத்தும்)  நூலினைப்  போலவும்; உடற்பொறை  தொடர்ந்த நோய்
என
 -  உடலாகிய  பாரத்தைப் பிணித்துள்ள நோயினைப்  போலவும்;
பால்உறு  பிரை  என,  பல்முறை  கலந்து  -  பாலிற்  பொருந்திய
பிரையினைப்  போலவும்  (இலக்குவன்)  பலமுறை  உட்புகுந்து;  வேல்
உறு  சேனையைத்  துணித்து  வீழ்த்தினான்
- வேலேந்திய அரக்கர்
சேனையை வெட்டி வீழ்த்தினான்;.
 

கால்  - காற்று, கடு - நஞ்சு, கலிங்கம் - ஆடை. கம்மியர் - ஆடை
நெய்வோராகிய  காருகர். நூல் - பாவிடையே செலுத்தப்பெறும்   ஊடை
நூல்.  பிரை  -  பால்  தயிராதற்பொருட்டுத் தெளிக்கப்படும்   மோர்த்
துளி.  கலத்தல் - எங்கும் சென்று  பொருந்துதல்.  “விரைந்து  செல்லும்
தொழில்  பற்றிக்  காற்றும், உயிரைப்  போக்கும்  திறம் பற்றிக் கடுவும்,
உள்ளே  புகுந்து  கரந்து  பரவுதல்  பற்றிக்  கம்மியர் நூலும், அகலாது
தொடர்ந்து  வருத்துதல் பற்றி நோயும்,  பகைவர்  சேனையை உருவறச்
சிதைத்தல் பற்றிப் பாலுறு பிரையும் இலக்குவனுக்கு உவமையாயின.
 

                                                 (52)
 

8986.

கண்டனன்-திசைதொறும் நோக்கி, கண் அகல்
மண்தலம், மறி கடல் அன்ன மாப் படை,
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும்
தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையே.
 

கண் அகல் மண்தலம் மறி கடல் அன்ன மாப்படை  -  இடம்
விரிந்த மண்ணுலகில் (அலைகள்) மறிந்து சூழும் கடற் பரப்பினை