பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 795

ஒத்த     (தனது) பெருஞ்சேனையானது; விண்டு  எறி  கால்  பொர
மறிந்து  வீற்றுறும்
 -  மாறுபட்டு  வீசும்  பெருங்காற்று மோதுதலால்
(மரங்கள்)  ஒடிந்து  சின்னபின்னப்பட்டுக் கிடக்கும்;  தண்டலை 
ஆம்
எனக்  கிடந்த  தன்மையே
- சோலையினை ஒத்துச் சிதைந்து கிடந்த
தன்மையினை;  திசைதொறும்  நோக்கிக்  கண்டனன் - (இந்திரசித்து)
எல்லாத் திசைகளிலும் உற்று நோக்கிக் கண்டான்.
 

                                                 (53)
 

8987.

மிடலின் வெங் கட கரிப் பிணத்தின் விண் தொடும்
திடலும், வெம் புரவியும், தேரும், சிந்திய
உடலும், வன் தலைகளும், உதிரத்து ஓங்கு அலைக்
கடலும், அல்லாது இடை ஒன்றும் கண்டிலன்.
 

மிடலின்  வெங் கட கரிப்பிணத்தின் விண் தொடும் திடலும் -
வன்மை  மிக்க   கொடிய   மதமுடைய யானைகளின் பிணங்களாலாகிய
வானத்தை   அளாவிய    மேட்டுப்பகுதியும்;  வெம்புரவியும்  தேரும்
சிந்திய   உடலும்,   வன்தலைகளும்
  -   வெவ்விய  குதிரைகளும்
தேர்களும்  (வீரர்களின்)  சிதறுண்ட  உடம்புகளும்,  தலைகளும்; ஓங்கு
அலை  உதிரத்துக்  கடலும்
- ஓங்கி மேலெழும் அலைகளை உடைய
குருதிக்  கடலும்; அல்லாது  இடை  ஒன்றும்  கண்டிலன்  - ஆகிய
இவற்றை   அன்றி  (த்தன்  சேனையில்  அழிவின்றி  உள்ளனவாக)
அப்போர்க் களத்தினிடையே வேறொன்றையுங் காணாதவனாயினான்.
 

                                                 (54)
 

8988.

நூறு நூறாயிர கோடி நோன் கழல்
மாறு இல் போர் அரக்கரை, ஒருவன் வாட் கணை
கூறு கூறு ஆக்கிய குவையும், சோரியின்
ஆறுமே, அன்றி, ஓர் ஆக்கை கண்டிலன்.
 

நோன்கழல்  மாறு இல்போர் நூறு நூறாயிர கோடி அரக்கரை -
;வலிய   வீரக்கழலினையும்   மாறுதலில்லாத  போராற்றலையும் உடைய
நூறு    நூறாயிரங்  கோடி  அரக்க  வீரர்களை ஒருவன்  வாட்கணை
கூறுகூறு  ஆக்கிய  குவையும்
-  (இலக்குவன் என்னும்) ஒருவனுடைய
கூரிய      அம்புகள்      துண்டந்      துண்டமாகச்      சிதைத்த
பிணக்குவையினையும்; சோரியின்  ஆறுமே  அன்றி  ஓர்  ஆக்கை
கண்டிலன்
  -   (அங்கு   பெருகி  ஓடிய)  குருதி  ஆற்றினையுமே
அல்லாமல்  வேறு  முழுமையான  உடம்பினை  உடையார் யாரையும்
(இந்திரசித்து அப்போர்க்களத்தில்) கண்டிலன்.