பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 797

தொக்கனர், அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற,
புக்கது, கவிப் பெருஞ் சேனைப் போர்க் கடல்.
 

அக்கணத்து,  அடுகளத்து  அப்பு  மாரியால்  -   அப்பொழுது
போர்க்களத்திலே  அம்பு மழையால்; உக்கவர் ஒழிதர உயிர் உளோர்
எலாம்
 -  உயிர் நீங்கினோர் போக எஞ்சி உயிரோடுள்ள அரக்கர்கள்
எல்லோரும்;   அரக்கனை   தொக்கனர்   சூழ்ந்து    சுற்றுற   -
இந்திரசித்தனை (க்காவலாக) சூழ்ந்து நிற்றி நிற்க; போர் கவிப் பெருஞ்
சேனைக்   கடல்  புக்கது
 -  பொருதற்றொழிலை  உடைய  வானரப்
பெருஞ்சேனையாகிய கடல் (அவ்வரக்கர் மேற் சென்று) புகுந்தது.
 

                                                 (58)
 

 8992.

ஆயிரம் மலருடை ஆழி மாப் படை,
‘ஏ’ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்,
தூயவன் சிலை வலித் தொழிலும், துன்பமும்
மேயின வெகுளியும், கிளர வெம்பினான்.
 

ஆயிரம் மலருடை ஆழி மாப்படை - ஆயிரம்  தாமரை என்னும்
அளவினைக்  கொண்ட  கடல் போன்ற பெரிய (அரக்கர்)  சேனை; ‘ஏ’
எனும்  மாத்திரத்து  இற்ற  கொற்றமும் 
-  ‘ஏ’ என்னும்  அளவில்
அழித்த  (இலக்குவனது)   வெற்றித்திறமும்;  தூயவன்  சிலை  வலித்
தொழிலும்  துன்பமும்  
-  தூயோனாகிய  இலக்குவனது  விற்றொழில்
வன்மையும்  (தான்  தொடங்கியவேள்வி)  முற்றுப்  பெறாமையால் தான்
அடைந்த)  துன்பமும்;  மேயின  வெகுளியும்  கிளர வெம்பினான் -
(அதுபற்றிப்)  பொருந்திய  கோபமும்  (தன் உள்ளத்திற்)  பொங்கி  எழ
(இந்திரசித்து) மனம் வெதும்பினான்.
 

மலர்     - தாமரை. இங்கு ஒரு பேரெண்ணைக் குறித்தது. தாமரை,
வெள்ளம்,   ஆம்பல்   என்பன    பேரெண்களைக்    குறிப்பனவாம்.
இதனைத்    தொல்காப்பிய   எழுத்ததிகார   393- ஆம்   நூற்பாவிற்
காணலாம்.  ‘ஏ’  எனும்  மாத்திரை.  ‘ஏ’  என்னும்  கால  அளவுக்குள்
விரைவுக்குறிப்பு. இறுதல் - அழித்தல். கொற்றம் -  வெற்றி.  தூயவன் -
இலக்குவன். வெம்பியவன் - இந்திரசித்து.
 

                                                 (59)
 

8993.

மெய் குலைந்து, இரு நில மடந்தை விம்முற,
செய் கொலைத் தொழிலையும், சென்ற தீயவர்
மொய் குலத்து இறுதியும், முனிவர் கண்டவர்
கை குலைக்கின்றதும், கண்ணின் நோக்கினான்.