பக்கம் எண் :

798யுத்த காண்டம் 

இருநில  மடந்தை  மெய்  குலைந்து  விம்முற  -  பெரிய  நில
மகளாகிய  பூமிதேவியும் உடல்  நடுங்கித் துன்புறும்படி; செய்கொலைத்
தொழிலையும்
 -   இலக்குவன்  செய்யும்  கொல்லுதல்  தொழிலையும்;
சென்ற தீயவர்  மொய்  குலத்து  இறுதியும்  -  போர்  மேற்சென்ற
அரக்கர்   குலத்தின்    அழிவையும்;   கண்டவர்   முனிவர்   கை
குலைக்கின்றதும்
   -    (போர்க்களத்தைக்)    கண்ணுற்றவர்களாகிய
முனிவர்கள்  கை விதிர்த்தலையும்; கண்ணின் நோக்கினான் - (இந்திர
சித்து நேரே) கண்களாற் கண்டான்.
 

பொறையிற்  சிறந்த  பூமி  தேவியும்  அரக்கர்களின்  மடிந்து வீழும்
உடற்பொறை தாங்கலாற்றது குலைந்தனள் என்றார்.
 

                                                 (60)
 

               இந்திரசித்தன் நியமம் குலைந்து வருந்திப் புலம்புதல்
 

8994.

மானமும் பாழ்பட, வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட, முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட, சிறந்த மந்திரத்து
ஏனையும் பாழ்பட. இனைய செப்பினான்.
 

மானமும் பாழ்பட - தனது பெருமை பாழ்பட்டொழியவும்; வகுத்த
வேள்வியின்  மோனமும்  பாழ்பட
 -  (தான்) இயற்றிய வேள்வியில்
மோன  நிலைபாழ்  பட்டொழியவும்;  முடிவு இலா முரண் சேனையும்
பாழ்பட
  -   எல்லையற்ற   வலிமை   வாய்ந்த   (தனது)  சேனை
வெறுமையுற்று  அழியவும்; சிறந்த  மந்திரத்து  ஏனையும் பாழ்பட -
சிறந்த   மந்திரம்   செபம்   முதலாக   உள்ள  ஏனைய  வேள்விக்
கிரியைகளும்   பாழ்பட்டுச்   சிதையவும்;  இனைய  செப்பினான்  -
இத்தகைய மொழிகளைக் கூறினான் (இந்திரசித்து).
 

மானம்  -  தன்னிலையிற்  தாழாமையும்;  ஊழ்  வயத்தால்  தாழ்வு
வந்தால் உயிர் வாழக் கருதாமையுமாகிய பெருமை.
 

                                                 (61)
 

8995.

‘வெள்ளம் ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர்-ஐந்தொடு ஓயுமால்;
எள்ள அரு வேள்வி நின்று, இனிது இயற்றுதல்
பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால்.
 

வெள்ளம்     ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின் - இருபத்தைந்து
வெள்ளம்  என்னும்  தொகையினதாகி  விரிந்து  பரவிய சேனையில்;
உள்ளது அக்குரோணி ஈர் ஐந்தொடு ஒயுமால் - எஞ்சி உள்ளது