பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 799

பத்து   அக்குரோணி   சேனை  (அதுவும்)  தளர்ந்து  ஒழியும்;  எள்ள
அருவேள்வி  நின்று இனிது இயற்றுதல் பிள்ளைமை
- இகழ்தற்கரிய
யாகத்தினை  இடம்  பெயராது  நின்று  இனிது இயற்றுதல் என்பது சிறு
பிள்ளைத்தனம்;  அனனயது சிதைந்து பேர்ந்ததால்  - அந்த வேள்வி
வேரறச் சிதைந்து போயிற்று.
 

வெள்ளம்  என்பது பேரெண். கோடி x கோடி x கோடி x கோடி x
கோடி  -  என  57 ஆம் தானத்தது வெள்ளம் என்பர்.  அக்குரோணி
என்பது  21870  தேர்களும், 21870 யானைகளும், 65610   குதிரைகளும்,
109350 காலாட்படை வீரர்களும் ஆகிய பெருஞ்சேனை என்பர்.
 

                                                 (62)
 

8996.

‘தொடங்கிய வேள்வியின் தூம வெங் கனல்
அடங்கியது அவிந்துளது, அமையுமாம் அன்றே?
இடம் கொடு வெஞ் செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால்.
 

தொடங்கிய  வேள்வியின் தூம வெங்கனல் - தொடங்கிச் செய்த
புகையொடு  கூடிய  வெம்மை  உடைய  தீ; அடங்கியது அவிந்துளது
அமையுமாம்  அன்றே?
 -  (மேலோங்கி  எரியாமல்)  அடங்கியதாய்
அவிந்துள்ளது  ஒன்றே  போதுமல்லவா?  இடம்  கொடு  வெஞ்செரு
இன்று எனக்கு வென்றி
- இடத்தைக் கொண்டு நிகழும் கடும் போரில்
இன்று  எனக்கு  வெற்றி;  அடங்கியது என்பதற்கு  ஏது ஆகுமால் -
இல்லையாகி அடங்கியது என்பதற்குரிய தீய நிமித்த மாகும்.
 

                                                (63)
 

8997.

‘அங்கு அது கிடக்க; நான் மனிதற்கு ஆற்றலென்
சிங்கினென் என்பது ஓர் எளிமை; தேய்வுற,
இங்கு நின்று, இவை இவை நினைக்கிலேன்; இனி,
பொங்கு போர் ஆற்றல் என் தோளும் போனதோ?
 

அது  அங்கு கிடக்க - (வேள்வி அழிந்தமையாகிய) அது ஒருபுறம்
கிடக்க;  நான  மனிதற்கு  ஆற்றலென்  சிங்கினென்  என்பது ஓர்
எளிமை
-  நான்  மனிதற்கு  வலியற்றேனாய் (ஆற்றலின்) குறைந்தேன்
என்று எண்ணுவது எளிமையின் பாலதாகும்; தேய்வு உற இங்கு நின்று
இவை   இவை   நினைக்கிலேன்
 -  (எனது   வலிமை)  தேய்ந்து
ஒழியுமாறு  இவ்விடத்தில்  நின்று இத்தகைய எண்ணங்களை  நினைக்க
மாட்டேன்; இனி பொங்கு போர் ஆற்றல்