பக்கம் எண் :

8யுத்த காண்டம் 

நஞ்சுதோய்    அமுதம் - பிரிவில் நஞ்சாயும் சேர்வதில் அமுதாயும்
உள்ள நிலை. உம்மை நினைப்பு விட்டு ஆவி போக்க  அஞ்சினேன் -
உம்மை  நினைப்பதை  விட்டு  விட்டால்  என்னுயிர்  போய்   விடும்
என்பதை வேறு வகையாகச் சொல்லியது. அமுதின் வந்தீர் -  அவதார
உணர்வு இன்றி அழகுணர்வால்  கூறியது. மாதர் என்பதில் அர் அசை
ஆர் உயர்வுப் பன்மை விகுதி.

                                                 (10)

7642.

‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில்
                                       வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர்
                                        அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர்
                                       அம்மா!

தோற்பித்தீர்    - யார்க்கும் தோலாத என்னை நுமக்குத் தோற்கச்
செய்து;  மதிக்கு மேனி  சுடுவித்தீர்  - சந்திரனால் என்  உடம்பைச்
சுடுமாறு   செய்தீர்;  தென்றல்  தூற்ற  வேர்ப்பித்தீர்  -  தென்றல்
காற்றுப்பரவி வீசக் காம வெப்பத்தால் புழுங்கிய  உடம்பு  வேர்க்குமாறு
செய்தீர்;  வயிரத்  தோளை மெலிவித்தீர் - என் உறுதியான தோளை
மெலியச்  செய்தீர்; வேனில்  வேளை  ஆர்ப்பித்தீர்  - வேனிலைத்
துணையாகக்  கொண்ட  மன்மதனை  ஆர்ப்பொலி  செய்யச்  செய்தீர்;
என்னை  இன்னல்  அறிவித்தீர் - எனக்குத் துன்பம் என்பது என்ன
என்பதை   அறியும்படி  செய்தீர்;  அமரர் அச்சம்  தீர்ப்பித்தீர்  -
தேவர்களின்   அச்சத்தை    நீக்குவித்தீர்;   இன்னம்   என்   என்
செய்வித்துத்  தீர்திர்
 - இன்னும் என்னென்ன துன்பங்களை எனக்கு
விளைவித்துத் தீர்வீரோ?

காம  வயப்பட்ட   பெருவீரனை  ஒரு  பெண்  படுத்தும்  பாட்டை
இப்பாடல் தெரிவிக்கிறது. அம்மா - வியப்புக் குறித்தது.

                                                 (11)

7643.

‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து