பக்கம் எண் :

80யுத்த காண்டம் 

புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன், வந்த சினத் திறலோன்.

அவ்   இராமன் எனும் களிமா - அந்த இராமன் என்கின்ற மதங்
கொண்ட யானை;  உண்டாடிய  வெங்களன்  ஊடுருவ  கண்டான் -
(உயிர்களை)  விழுங்கி விளையாடிய  கொடிய  போர்க்களத்தை முற்றும்
ஊடுருவிக் கண்டான்; புண்தாள்  உறு  நெஞ்சு  புழுக்கம்  உறத்  -
(கண்டகாட்சியால்)  புண்பட்ட  (தன்) மனம்  புழுங்கி  அவலிக்க; வந்த
சினத்திறலோன்  திண்டாடினன்
 - (போருக்கு வந்த) பெருஞ்சினமும்
வலியும் உடைய அதிகாயன் வருந்தினான்;

களிமா -  மதங்கொண்ட யானை,  உண்டாடிய - உயிர்களை உண்டு
விளையாடிய, களன் - கடைப்போலி. உறு நெஞ்சு - வினைத்தொகை.

                                                  (27)

7754.மலை கண்டனபோல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம்,
நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந்
தலை கண்டிலன், நின்று சலித்தனனால்.

மலை   கண்டன போல் வரு தோளொடு - மலையைக் கண்டாற்
போன்று  (விளங்கி)  வருகின்ற  தோள்களுடன்;  தாள்  கலை கண்ட
கருங்கடல்  கண்டு
 -  தாள்களும் கலைதல் பொருந்திய கருமையான
கடலைக்  கண்டு; (கும்பகருணன்  உடல்)  உளவாம்  நிலை கண்டன
கண்டு
  -   (அவனுக்கு)   நேர்ந்துள்ள   நிலைமைகளை  (மனத்தில்)
எணணிக்  கண்டு;  (வருந்திய  அதிகாயன்) ஒரு தாதை நெடுந் தலை
கண்டிலென்
  -   ஒப்பற்ற  தந்தையாகிய  (கும்பகருணனது)  பெரிய
தலையைக்  கண்டிலேன்  என்று;  நின்று  சலித்தனனால் - (எண்ணி)
நின்று வருந்தினான்.

கலைகண்ட   கருங்கடல் - கலைதல் பொருந்திய கருமையான கடல்,
ஈண்டுக்  கும்பகருணன்  உடம்பு.  தோளும்  தாளும்  தலையும்  அற்ற
தாதையின்  உடம்பு கண்டு அதிகாயன்  வருந்தினான்  என்க.  சலி்த்தல்
- வருந்துதல்.

                                                  (28)

7755.‘மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண்