என்தோளும் போனதோ? - இப்பொழுது வெகுண்டு போர் செய்தற்குரிய ஆற்றல் மிக்க என்தோள்களும் இல்லா தொழிந்தனவோ? |
(64) |
8998. | ‘”மந்திர வேள்வி போய் மடிந்ததாம்” எனச் சிந்தையின் நினைந்து, நான் வருந்தும் சிற்றியல், அந்தரத்து அமரரும், “மனிதர்க்கு ஆற்றலன்; இந்திரர்க்கே இவன் வலி!” என்று ஏசவோ?’ |
மந்திர வேள்வியோய் மடிந்ததாம் எனச் - மந்திரத்துடன் இயற்றப்படும் யாகம் சென்று அழிந்ததாம் என்று; சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் - மனதிலே நினைந்து நான் வருந்தும் சிறுமைத்தன்மை; அந்தரத்து அமரரும் - வானத்திலுள்ள தேவர்களும்; “மனிதர்க்கு ஆற்றலன்; இந்திரர்க்கே இவன் வலி!” என்று ஏசவோ? - (இவ்விந்திரசித்து) ‘மனிதன் ஒருவனுக்கு (எதிர் நிற்க) ஆற்றாதவனாயினான், இவனது வலிமை இந்திரனை வெற்றி கொள்வதற்கு மட்டுமே’ என (என்னைக் குறித்துப்) பழித்துரைத்தற்காகவோ? |
(65) |
8999. | என்று அவன் பகர்கின்ற எல்லை, வல் விசை, குன்றொடு மரங்களும், பிணத்தின் கூட்டமும், பொன்றின கரிகளும், கவிகள் போக்கின; சென்றன பெரும் படை இரிந்து சிந்தின. |
என்று அவன் பகர்கின்ற எல்லை - என்று அவ்இந்திரசித்து (தனக்குள்) சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதில்; குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும் - குன்றுகளோடு மரங்களையும் பிணத்தின் தொகுதிகளையும்; பொன்றின கரிகளும் கவிகள் வல்விசை போக்கின - இறந்த யானைகளையும் குரங்குகள் வலிய விசையினோடு (அரக்கர் மேல்) வாரி வீசின; சென்றன பெரும் படை இரிந்து சிந்தின - (இந்திரசித்தனுடன்) சென்றனவாகிய பெரும் சேனைகள் நிலைகெட்டுச் சிதறின. |
(66) |
9000. | ஒதுங்கினர், ஒருவர் கீழ் ஒருவர் புக்குறப் பதுங்கினர், நடுங்கினர்; பகழி பாய்தலின், பிதுங்கினர்; குடர் உடல் பிளவு பட்டனர்; மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினார். |