9005 | ‘அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி, உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த நம்பியை, முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன தம்பியை, கண்டு, நின்தன் தனு வலம் காட்டிற்று உண்டோ? |
9006 | தீ ஒத்த வயிர வாளி உடல் உற, சிவந்த சோரி காயத்தின் செவியினூடும், வாயினும், கண்களூடும், பாய, போய், இலங்கை புக்கு, வஞ்சனை பரப்பச் செய்யும் மாயப் போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மடியும் அன்றே! |