பக்கம் எண் :

82யுத்த காண்டம் 

                      அதிகாயன், இலக்குவன்பால் தூது அனுப்புதல்

7757.என்னா, முனியா, ‘இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படிச் செய்து பெயர்ந்து,
அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்’ என்று
உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்:

என்னா    முனியா - என்று கூறிச் சினந்து; இது இழைத்துளவன்
பின்னானையும்
 -  இச்செயலைச்  செய்தவனாகிய   (இராமன்)   பின்
பிறந்த    (இலக்குவனையும்);    இப்படிச்  செய்து   பெயர்த்து   -
இத்தன்மையன் (ஆகும்படி) செய்து போய்; அன்னான் இடர்  கண்டு -
அந்த  இராமனுடைய  துன்பத்தைக்  கண்டு; இடர் ஆறுவென் என்று
உன்னா
 -  (என்)  துனபம் தணிவேன் என்று நினைத்து;  ஒருவற்கு -
ஒரு  தூதுவனுக்கு; இது  உணர்த்தினனால்  -  இதனை   உணர்த்தல்
ஆனான்.

இப்படிச்     செய்தல் - கும்பகருணனைச் செய்தது போல் கைவேறு
கால்வேறாகச்   செய்தல்.   முனியா,  உன்னா  -  செய்யா   என்னும்
வாய்பாட்டு  உடன்பாட்டு  வினையெச்சங்கள்.  ஒருவன்   -   மயிடன்
(அடுத்த பாடல் கொண்டு இதை உணரலாம்.)

                                                  (31)

7758.‘வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில்
போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்;
நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்;
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்.

மயிடன் நீ வா - மயிடனே நீ வா; ஒருவல் விசையில் நீ போ -
ஒப்பற்ற மிக்க வேகத்தோடு (புறப்பட்டு) நீ போய்;  அவ் இலக்குவனில்
புகல்வாய்
 -  அந்த  இலக்குவனிடத்தில்  சொல்லுவாய்;  நான்  ஈது
துணிந்தனென்  நண்ணினெனால்
 - நான் (இலக்குவனை முண்டமாகச்
செய்யும்)  இச்செயலை  ஆராய்ந்து   துணிந்துள்ளேன்;  மேல் நீதியை
உன்னி விளம்பிடுவாய்
- சிறந்த நீதியை உணர்ந்து சொல்லுவாய்.

நண்ணுதல்     - ஆராய்தல், ஈது - இலக்குவனை தோளும் தாளும்
அற்றவனாகச்  செய்தல்.  நான்காவது  அடியில்  ‘நீதியை உன்னி’ என்ற
பாடம் ஓசை நலன் கருதிக் கொள்ளப்பெற்றது.

                                                  (32)

7759.‘"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,