பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 83

உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்.

உந்து ஆர் துயரோடும் - மேலுந்தி எழுகின்ற மிக்க துயரத்தோடும்;
உருத்து எரிவான் - சினந்து எரிபவன் ஆகிய (அதிகாயன்  என்பவன்);
அம்தார்   இளவற்கு   -   அழகிய  மாலை  அணிந்த  தம்பியாகிய
(கும்பகருணன்)  இறந்ததன்  காரணமாக;  அயர்வு  எய்தி   அழும் -
மனத்துன்பம்  அடைந்து  அழுகின்ற;  தம்  தாதை  மனத்து   இடர்
தள்ளிடுவான்
 -  தம்  தந்தையின்  மனத்   துன்பத்தைப்   போக்கும்
பொருட்டு;   வந்தான்   என  -  வந்துள்ளான்  என;  முன்  சொல்
வழங்குதியால்
- முதற்சொல்லைச் சொல்லுவாய்.

அயர்வு   -   மனத்துன்பம்,  உருத்து  -  சினந்து,  முன்சொல்  -
முதற்சொல், ஆல் - அசை.

                                                  (33)

7760.‘கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான்,
நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்,
சூளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்;

கோளுற்றவன்    - (துன்பம்) கொள்ளுதலைப்  பொருந்தியவனாகி;
நெஞ்சு  சுடக்  குழைவான்  -  மனம்  கொதித்து  வருந்துபவனாகிய
இராவணனுடைய;  நாள்  உற்ற  இருக்கையில்  -  நாளோலக்கமாகிய
அவையில்; ஒரு  தன்  தாள்  அற்று உருளக்கணை தள்ளிடுவான் -
ஒப்பற்ற  (இலக்குவன்) தன் கால்கள்  அற்று  உருளுமாறு  அம்புகளைச்
செலுத்துவதாக; யான் சூளுற்றதும் உண்டு  - நான் (அதிகாயன்) சபதம்
செய்ததும் உண்டு; அது சொல்லுதியால் - அதனைச் சொல்லுவாய்.

கோளுற்றவன்     - துன்பத்தால்  கொள்ளப்பட்டவன்.  குழைதல் -
வருந்துதல்,   நாள்  உற்ற  இருக்கை  -  நாளோலக்கமாகிய    அவை.
சூளுறல் - சபதம் செய்தல்.

                                                  (34)

7761.‘தீது என்று அது சிந்தனை செய்திலெனால்;
ஈது என்று அறம் மன் நெறி ஆம்’ என, ‘நீ
தூது என்று இகழாது, உன சொல் வலியால்,
"போது" என்று, உடனே கொடு, போதுதியால்.