அது தீது என்று சிந்தனை செய்திலெனால் - அவ்வாறு (செய்யக் கருதிய செயல்) தீமை பயப்பது என்று சிந்தனை செய்ய மாட்டேன்; ஈது என்று மன் அறம் நெறி ஆம் என - இதுவே எப்பொழுதும் மன்னர்களுக்கு உரிய அறவழி ஆகும் என்று; நீ தூது என்று இகழாது - நீ தூதுவன் தானே என்று (அவ்விலக்குவன்) இகழாதவாறு; உன சொல் வலியால் - உன் சொல்லாற்றலால்; உடனே போது என்று கொடு போதுதியால் - உடனே உடன் வருவாய் என்ற (அவனை இங்கு) அழைத்துக் கொண்டு வருவாய்.
|
அது - இலக்குவனை முண்டமாக்க எண்ணிய எண்ணம்.
|
(35)
|
| 7762. | ‘செரு ஆசையினார், புகழ் தேடுறுவார், இருவோரையும், நீ வலி உற்று, "எதிரே பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்; வருவோரை எலாம் வருக!" என்னுதியால்.
|
செரு ஆசையினார் - போரிடுதலில் விருப்பமுள்ளவர்கள்; புகழ் தேடுறுவார் - புகழைத் தேடுவோர்; இருவோரையும் - ஆகிய இராம இலக்குவர் இருவரையும்; நீ வலி உற்று - நீ வலிய (எதிரே சென்று) பொருந்தி; எதிரே பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் - (என்) எதிரே போரிட வருபவர்கள் இயமபுரியில் புக்கு வாழப் போகிறவர்கள் (என்று கூறி); வருவோரை எலாம் வருக என்னுதியால் - (போரிட) வருகின்றவர்களையெல்லாம் வருக என்று கூறிடுவாய்.
|
இருவோர் - இராமஇலக்குவர். வருவோரை - ஐ சாரியை. வினையாலணையும் பெயர். ஆல் - அசை.
|
(36)
|
| 7763. | ‘சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான், "வந்தான்" என என் எதிரே, மதியோய்! தந்தாய்எனின், யான் அலது, யார் தருவார், உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்?
|
மதியோய் - நுண் மதியுடையவனே; எந்தை சிந்தா குலம் திரித்திடுவான் - என் தந்தையின் மனத் துயரத்தை மாற்றும் பொருட்டு; வந்தான் என என் எதிரே தந்தாய் எனின் - (அதிகாயன்) வந்துள்ளான் என்று சொல்லி (இலக்குவனை) எனக்கு எதிரில் (அழைத்து) வருவாய் என்றால்; உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் - உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான) உயர்ந்த |