பொருள்களை எல்லாம்; யான் அலது யார் தருவார் - என்னைத் தவிர யார் தருவார்கள்?
|
சிந்தா குலம் - மன வருத்தம், திரித்தல் - மாற்றதல், உம்தாரிய - உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான)
|
(37)
|
| 7764. | ‘வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு ஏறே வருமேல், இமையோர் எதிரே, கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும் மாறே, ஒரு மன் என வைக்குவெனால்.
|
அவ் இலக்குவன் என்ன வேறே விளம்பு - அந்த இலக்குவன் என்று வேறாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற; ஏறே வருமேல் - ஆண் சிங்கமே (போருக்கு) வருவானானால்; இமையோர் எதிரே - தேவர்களுக்கு எதிரில்; கூறே பல செய்து உயிர் கொண்டு - (அவன் உடலைப்) பல துண்டுகளாகச் செய்து உயிரைக் கொண்டு; உனையும் மாறே ஒரு மன் என வைக்குவெனால் - உன்னையும் (செய்த உதவிக்குக்) கைம்மாறாக ஒரு மன்னனாகச் செய்வேன்.
|
வேறே - வேறாக (சிறப்பித்து) ஏறு - ஆண் சிங்கம், மாறு - கைம்மாறு.
|
(38)
|
| 7765. | ‘விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார் பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும் உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால்.
|
விண் நாடியர் விஞ்சையர் - (நீ இலக்குவனை என்னிடம் அழைத்து வந்தால்) வான நாட்டவரும், வித்தியாதரரும் ஆகிய, அம் சொலினார் - அழகிய சொற்களை உடைய; பெண் ஆர் அமுது அன்னவர் - பெண்களில் அருமையான அமிழ்தம் போன்றவர்கள்; பெய்து எவரும் உண்ணாதன - ஊற்றித்தர (வேறு) எவரும் உண்ணாதனவாகிய; கூர் நறவு உண்ட குடம் - மிகுதியான கள்ளைக் கொண்ட குடங்கள்; எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் - எண்ணாயிரம் வேண்டினும் தருவேன்.
|
உனக்கு மிகுதியான கள் நிறைந்த குடங்கள் எண்ணாயிரமாயினும் தருவேன். பெய்து எவரும் உண்ணாதன - மகளிர் பொற்கலத்துத் தேட்கடுப்பன்ன தேறலை வாக்குபு தரத்தர ஆடவர் உண்ணும் மரபு |