பக்கம் எண் :

86யுத்த காண்டம் 

குறித்து  வந்தது.  கூர்  - மிகுதி உரிச்சொல். தசும்பு - குடம். தசும்பு
துளங்கு இருக்கை என்றார் (பதிற். 42) பதிற்றுப்பத்தில்.

                                                  (39)

7766.‘உறைதந்தன செங் கதிரோன் உருவின்
பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர்
திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன்
முறை தந்தன, தந்து முடிக்குவெனால்,

செங்கதிரோன் உருவின் உறை தந்தன பொறை தந்தன- சிவந்த
கதிர்களை    உடைய     கதிரவன்   நிறத்தோடு    பொருந்தியனவும்
பாரமுள்ளனவும்;  இமையோர்  திறை  தந்தன - தேவர்களை திறைப்
பொருளாகத் தந்தனவும்; தெய்வ நிதிக் கிழவன் - தெய்வ  நிதிகளுக்கு
எல்லாம்  தலைவனான  குபேரன்;  முறை தந்தன -  முறைமை பற்றித்
தந்தன   வுமான;   காசு   ஒளிர்பூண்   -   மணிகள்   ஒளிவிடுகிற
அணிகலன்களை;   தந்து   முடிக்குவெனால்   -   தருவேன்  (தந்து
முடிப்பேன்).

செல்வம்     பல தருவேன். உறை தந்தன - பொருந்தியன. பொறை
தந்தன  - பாரம் உள்ளன, முறை தந்தன - முறைமை  பற்றித்  தந்தன.
முறை  -  உடன்பிறந்த  முறை  என்க.  தந்து   முடிக்குவென்  - முடி
துணைவினை,  (தன்  பொருள் இழந்து முதல் வினையின் பொருளில்
வருவது) தெய்வநிதிக் கிழவன் - குபேரன்.

                                                  (40)

7767.‘மாறா மத வாரிய, வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன, பல் பகலும்
தேறாதன, செங் கண வெங் களி மா
நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால்,

வாரிய     மதமாறா  -   வடிகிற   மதப்பெருக்கு  மாறாதனவும்;
வண்டினொடும் பாறு  ஆடுமுகத்தன  - வண்டுகளோடு பருந்துகளும்
பறந்து  ஆடும்  முன்புறத்தை உடையனவும்; பல் பகலும் தேறாதன -
பலநாளும்    (மதவெறியில்    இருந்து)   நீங்காதனவும்;    செங்கண்
வெங்களிமா
- ஆகிய சிவந்த கண்களை உடைய கொடிய  மதம் மிக்க
யானைகள்;  நூறாயிரம்   ஆயினும்   நுந்துவெனால்  -  நூறாயிரம்
வேண்டுமானாலும் தருவேன்.

மண   மதத்திற்காக வண்டுகளும், எதிர்ப்பட்டோரைக் கொல்லுதலால்
கிடைக்கும்  உணவுக்குப்  பருந்துகளும்  மத  யானைக்கு  முன் பறந்து
வரும் என்க, செங்கண் - பண்புத்தொகை. களிமா -