பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 861

9099.

‘முந்தை நாள், உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாயத் தள்ளி,
கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒரு கைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது, இப் பெரும் பலம் 
                                   கொண்டேயோ?

 

முந்தைநாள்,  உலகம்  தந்த  மூத்தவானோர்கட்கு  எல்லாம்
தந்தையார்
   -    முற்காலத்தில்   உலகங்களைப்   படைத்தவரும்,
(யாவருக்கும்)  மூத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தந்தையாரும் ஆகிய
பிரமதேவரின்; தந்தையாரைச்    செருவிடைச்     சாயத்தள்ளி -
தந்தையாராகிய  திருமாலைப்   போரிலே  தளர்ந்து வீழும்படி தள்ளி;
கந்தனார்  தந்தையாரைக்  கயிலையோடு   ஒருகைக் கொண்ட -
கந்தக் கடவுளின்  தந்தையாகிய ‘சிவபெருமானைக் கயிலாய மலையுடன்
ஒரு கையிற்  பெயர்த்தெடுத்துக்கொண்ட; எந்தையார் அரசு செய்வது,
இப்பெரும்    பலம்   கொண்டேயோ?
  -  என்  தந்தையாராகிய
இராவணனார்  (இவ்வுலகினை)  ஆட்சி  புரிவது   (நீ சரண்புகுந்துள்ள
மனிதரின்) இப் பெரிய வலிமையினைத்  துணையாகக் கொண்டுதானோ?
 

                                                 (166)
 

9100.

‘பனி மலர்த் தவிசின் மேலோன் பார்ப்பனக் 
                                குலத்துக்கு எல்லாம்
தனி முதல் தலைவன் ஆன உன்னை வந்து அமரர் 
                                         தாழ்வார்;

மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்? எங்களோடு அடங்கிற்று 
                                          அன்றே.

 

பனிமலர்தவிசின் மேலோன் பார்ப்பனக்குலத்துக்கு எல்லாம் -
குளிர்ந்த    தாமரை     மலரின்மேல்    உள்ளவனாகிய   பிரமனை
முதல்வனாகக்   கொண்ட   வேதியர்குகலத்துக்கெல்லாம்;   தனிமுதல்
தலைவன் ஆன உன்னை  வந்து  அமரர்  தாழ்வார்
 -  ஒப்பற்ற
முதன்மையுடைய    தலைவனாகிய   உன்னைத்   தேவர்கள்   வந்து
வணங்குவார்கள்; நீ மனிதருக்கு அடிமையாய் இராவணன் செல்வம்