பக்கம் எண் :

862யுத்த காண்டம் 

ஆள்வாய்     - (அத்தகைய    தலைமை  வாய்ந்த)  நீயோ (இழிந்த)
மனிதர்களுக்கு   அடிமையாகி    (அவர்களது    உதவிபெற்று)   நின்
தமையன் இராவணனுக்குரிய  அரச செல்வத்தை  ஆளுதற்கு உள்ளாய்;
இனி உனக்கு மானம் என்னோ? எங்களோடு அடங்கிற்று அன்றே
- இனி  உனக்குமானம்  என்ன  இருக்கின்றது?  அப்பெருமை (போரில்
இறந்தொழியும் நிலையினேம் ஆகிய) எங்களோடு அடங்கி ஒழிந்தது.
 

                                                 (167)
 

9101.

‘சொல்வித்தும், பழித்தும் நுங்கை மூக்கினைத் 
                               துணிவித்தோர் ஆர்?
எல் வித்தும் படைக் கை உங்கள் தமையனை எங்களோடும்

கொல்வித்தும், தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையை விழுமிது 
                                        அன்றோ?

 

சொல்வித்தும்,   பழித்தும் நுங்கை மூக்கினைத் துணிவித்தோர்
ஆர்?
-  (பிறர்  வாயிலாகப்)    பழியுரைகளைச்   சொல்லச் செய்தும்,
(தாமே) பழித்தும், உன் தங்கையின் மூக்கினை அறுத்தோர் யார்? (இன்று
நீ   சரணடைந்திருக்கின்ற  இம்மனிதரன்றோ);  எல்வித்தும்படைக்கை
உங்கள்       தமையனை      எங்களோடும்  கொல்வித்தும்
-
(இம்மனிதர்களைக் கொண்டு)    ஒளி    விடும்   படைகளை  உடைய
உங்கள் தமையனாகிய  இராவணனை  (ச்சுற்றத்தாராகிய)    எங்களோடு
கொல்வித்தும்; தோற்றுநின்ற    கூற்றினார்   குலத்தை   எல்லாம்
வெல்வித்தும்
 - (இதுவரையிலும்  எமக்குத்)   தோல்வியுற்று(ப்பின்னே)
நின்ற கூற்றுவனாரது பரிவாரத்தையெல்லாம்     (எங்களை)     வெற்றி
கொள்ளும்படி  செய்தும்;  வாழும்  வாழ்வின் வெறுமையே விழுமிது
அன்றோ?
 -  (அவற்றின்  பயனாக  நீ  பெற்று) வாழ்கின்ற வாழ்க்கை
வளத்தைவிட  (ஒன்றுமில்லாத) வறுமை   நிலையே மிகவும் சிறப்புடைய
தல்லவா?
 

                                                 (168)
 

9102.

‘எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன், 
                              இராமன் அம்பால்,
புழுதியோ பாயல் ஆகப் புரண்ட நாள், புரண்டு
                                   மேல்வீழ்ந்து,