பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 863

அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை?-விசயத் 
                                       தோளாய்!

 

‘விசயத்தோளாய்!    -    வெற்றித்திறம்  வாய்ந்த  தோள்களை
உடையவனே!  எழுதி  ஏர் அணிந்த  திண்  தோள்  இராவணன்
- (வரிக்கோலம்) எழுதப்பெற்ற   அழகினைக்   கொண்ட   திண்ணிய
தோள்களையுடைய இராவணன்; இராமன்  அம்பால் புழுதியேபாயல்
ஆகப்புரண்டநாள்
  -   இராமனது   அம்பினால்   (தாக்கப்பட்டுப்)
புழுதிபடிந்த  தரையினையே   பாயலாகக்கொண்டு புரள்கின்ற நாளிலே;
புரண்டு  மேல்  வீழ்ந்து அழுதியோ?  நீயும் கூட  ஆர்த்தியோ
- (அவன்  தம்பியாகிய  நீ  அப்புழுதியிற்) புரண்டு அவனது உடம்பின்
மேல்   வீழ்ந்து   அழப்போகின்றாயோ?  (அன்றி) நீயும் பகைவருடன்)
சேர்ந்து   (மகிழ்ச்சியால்)  ஆரவாரிப்பாயோ?  அவனை  வாழ்த்தித்
தொழுதியோ யாதோ, செய்யத்துணிந்தனை?
 -  (தமையனது உயிர்
கொண்டமைக்காக)    அந்த    இராமனை    வாழ்த்தி    வணங்கப்
போகின்றாயா? (இவற்றுள்) எதனைச் செய்யத் துணிந்துள்ளாய்?’
 

                                                 (169)
 

9103.

‘ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர் வந்து 
                                         எய்தும்

மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும்  
                                     அன்னான்-

தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியோ? சரத்தினோடும்
வானிடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கில்!’ என்றான்.
 

ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் -
ஊனுடைய   உடம்பினின்றும்  (உயிர்) நீங்கி, மருந்தினாலே உயிர் வந்து
சேரப் பெற்றுப் பிழைத்த; மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே?
-   மனிதர்கள்  இலங்கை    வேந்தனைக்  கொல்லவல்லாரோ?  நீயும்
அன்னான்   தானுடைச் செல்வம்  துய்க்கத்  தகுதியோ?
 -  நீயும்
அவ்விராவணன் பெற்றுடைய  செல்வத்தை நுகர்தற்குத்  தகுதியுடையாய்.
ஆவாயோ? யான் பழி மறுக்கில்